TA/Prabhupada 0614 - ஜாக்கிரதை! ஆயிரமாயிரம் ஆண்டுகளின் சிறு இடைவெளிகூட கீழேவிழ ஏதுவாகும்: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0614 - in all Languages Category:TA-Quotes - 1976 Category:TA-Quotes - Lec...")
 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 8: Line 8:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0613 - The Six Things we have to take Particular Care|0613|Prabhupada 0615 - Work for Krsna with Love and Enthusiasm, that is Your Krsna Conscious Life|0615}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0613 - ஆறு விசயத்தில் நாம் மிகுந்த கவனம் கொள்ளவேண்டும்|0613|TA/Prabhupada 0615 - கிருஷ்ணருக்காக அன்போடும் உற்சாகத்தோடும் பணியாற்றுவதே கிருஷ்ணபிரக்ஞை வாழ்வாகும்|0615}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:36, 25 June 2021



Lecture on SB 7.9.1 -- Mayapur, February 8, 1976

தேவர்களின் பட்டியல் பிரம்மரிலிருந்து தொடங்குகிறது. அவர்தான் தேவர்களுக்கும் அனைத்து பிற ஜீவராசிகளுக்கும் ஆதியான தந்தை. எனவே அவர் பிரஜா-பதி எனப்படுகிறார் அல்லது பிதா-மஹ, தாத்தா எனப்படுகிறார். எல்லாவற்றினதும் மூலம் அவர்தான். டார்வினின் கோட்பாடு, ஆதியில் உயிர்வாழ்க்கை இல்லை என்ற ஒரு அயோக்கிய கோட்பாடு, ஆனால், வேத அறிவின் படி பிரம்மா எனும் சிறந்த உயிர்வாழி இருந்தது. அங்கிருந்து உயிர்வாழ்க்கை தொடங்குகின்றது, படிப்படியாக அவை பௌதிக மாசால் இழிவடைகின்றன, உயிர்வாழ்க்கை இல்லை என்று அல்ல. தாழ்ந்த வகை உயிர்வாழ்வு நிலையிலிருந்து ஒருவர் மேலும் மேலும் உயர்ந்த நிலைக்கு செல்கிறார். அது ஒரு தவறான கோட்பாடு. உண்மையான கோட்பாடு என்னவென்றால், உயிர்வாழ்க்கை மிகவுயர்ந்த நபரான பிரம்மா - பிரஜாபதியிடமிருந்து தொடங்குகிறது. எனவே எந்த நல்ல விஷயத்திலும் அவர்கள் முன்னிலையில் இருக்கிறார்கள், ஏனென்றால், தாழ்ந்த வாழ்க்கை நிலையில் இருந்து கொண்டு உங்களால் கடவுளை அணுக முடியாது. உங்களுக்கு விளங்குகிறதா? தாழ்ந்த வாழ்க்கை நிலை என்பது பாவகரமான விளைவுகள் என்று பொருள். அந்த நிலையில் உங்களால் கடவுளை அணுக முடியாது. பரம் ப்₃ரஹ்ம பரம் தா₄ம பவித்ரம் பரமம் ப₄வான் (BG 10.12). (பக்கத்தில்) யார் பேசுகிறார்கள்? பவித்ரம் பரமம் ப₄வான். கிருஷ்ணர்தான் பரம பவித்திரன், பவித்ரம் பரமம். பரமம் என்றால் உச்சம் என்று பொருள். எனவே ஒருவர் தூய்மையற்றவராக இருக்கும்போது யாரும் கிருஷ்ணரை அணுக முடியாது. அது சாத்தியமில்லை. சில மோசடிக்காரர்களைப் போலவே, அவர்கள் சொல்கிறார்கள், "நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள், என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. உங்கள் ஆன்மீக முன்னேற்றத்திற்கு எந்த தடையும் இல்லை." இந்த அயோக்கியர்கள், இந்த முட்டாள்கள், உலகம் முழுவதையும் தவறான பாதையில் வழிநடத்துகிறார்கள். புருஷோத்தமரைப் புரிந்துகொள்வதில் ஒருவர் கீழ் தர நபர்களைப் போல நடந்து கொள்ளலாம் என. இல்லை. அது சாத்தியமில்லை. பரம் ப்₃ரஹ்ம பரம் தா₄ம பவித்ரம் பரமம் ப₄வான் (BG 10.12).

ஆகவே, பரம பவித்திரனை அணுக வேண்டும் என்றால், தூய்மையானவராக மாற வேண்டும். இல்லையெனில் சாத்தியம் இல்லை. நெருப்பாக இருந்திராமல், நெருப்பினுள் நுழைய முடியாது. பின்னர் நீங்கள் எரிக்கப்படுவீர்கள். இதேபோல், நீங்களும் பிரம்மம் என்றாலும்... பர-பிரம்மத்தின் ஒரு பகுதி கூட பிரம்மம்தான். அஹம் ப்₃ரஹ்மாஸ்மி. இதுதான் நம் அடையாளம். ஆனால், எவ்வகையான பிரம்மம்? பிரம்மத்தின் துகள் மாத்திரமே. தீப்பொறியும் முழு நெருப்பும் போல. அவை இரண்டும் நெருப்புதான், ஆனால் தீப்பொறி தீப்பொறி தான், பெரிய தீ பெரிய தீதான். தீப்பொறி பெரிய நெருப்பாக முடியாது. அவ்வாறு ஆக விரும்பினால், அவன் வீழ்ச்சியடைகிறான். பின்னர் மீதமுள்ள சிறிய ஒளி கூட, நெருப்பு, அணைக்கப்பட்டுவிடும். அஹங்காரத்தினால் தீப்பொறி (போன்றவன்) பெரிய நெருப்பாக மாற முயற்சிக்க விரும்பினால், அவன் வீழ்ச்சியடைகிறான். ஆருஹ்ய க்ருச்ச்₂ரேண பரம் பத₃ம் தத꞉ பதந்த்யத₄꞉ (SB 10.2.32). ஆருஹ்ய க்ருச்ச்₂ரேண, கடுமையான தவங்களாலும் விரதங்களாலும், உங்களால் அருவ பிரம்ம நிலை வரை உயரலாம், ஆனால் மீண்டும் வீழ்ச்சியடைவீர்கள். அதுதான் உண்மை. பல நபர்கள், பரபிரம்மத்துடன் இரண்டறக் கலக்க முயல்கின்றனர், ஆனால், இதன் விளைவாக அவர்கள் வீழ்ச்சியடைகிறார்கள். அவர்கள் வீழ்ச்சியடைய நேரிடும். அது சாத்தியமில்லை. ஆருஹ்ய க்ருச்ச்₂ரேண பரம் பத₃ம் தத꞉ பதந்த்யத₄꞉ (SB 10.2.32). கிருஷ்ணரின் தாமரை பாதங்களை வணங்குவதில் அக்கறை காட்டாமல், அவர்கள் வீழ்கின்றனர். ஆகவே, கிருஷ்ணருக்கு சமமாகவோ அவரை விட உயர்ந்தவராகவோ மாற முயற்சிக்காமல் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சில அயோக்கியர்கள் உள்ளனர், அவர்கள் கூறுகிறார்கள், "குறிப்பிட்டதொரு அயோக்கியன் கிருஷ்ணரை விட பெரியவன்" என்று. அவர்களின் பெயரைக் குறிப்பிட நான் விரும்பவில்லை. அந்த அயோக்கியர்கள் "அரவிந்தோ கிருஷ்ணரை விட பெரியவர்" என்று கூறுகிறார்கள். அவர்கள் அப்படிச் சொல்கிறார்கள். உங்களுக்கு அது தெரியுமா? எனவே, இந்த உலகம், மோசடிக்காரர்களும் முட்டாள்களும் நிறைந்தது. நாம் கண்டிப்பாக... ஆன்மீக வாழ்க்கையில் நாம் மிகவும் எச்சரிக்கையாகவும் புத்திசாலித்தனமாகவும் முன்னேற வேண்டும். அதை மிக இலேசாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் வீழ்ச்சியே காத்திருக்கும், ஒரு முறை வீழ்ச்சியடைவது என்பது கோடிகணக்கான ஆண்டுகளின் இடைவெளியைக் குறிக்கிறது. கிருஷ்ண உணர்வை பூரணமாக்க இந்த மனிதப் பிறவியை பெற்றுள்ளீர்கள், ஆனால், நீங்கள் தீவிரம் காட்டாவிட்டால், மீண்டும் இடைவெளி கோடிக்கணக்கான ஆண்டுகளாக இருக்கும்.

எனவே, எங்கள் கடமை தாங்தே₃ர சரண ஸேவி, ப₄க்த-ஸனே வாஸ். நாம் பக்தர்களுடன் சேர்ந்து வாழ்ந்து கொண்டு ஆச்சார்யர்களின் சேவையில் ஈடுபட வேண்டும். ஆசார்யம் மாம் விஜானீயான் நாவமன்யேத கர்ஹிசித் (SB 11.17.27). ஆச்சார்யர் என்பவர் ஸ்வயம் கிருஷ்ணரே என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவரை புறக்கணிக்காதீர்கள். யஸ்ய தே₃வே பரா ப₄க்திர் யதா₂ தே₃வே ததா₂ கு₃ரௌ (ŚU 6.23). இவை தான் ப்ரமாணம். எனவே, நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இங்கேயும் போல. ப்₃ரஹ்மாத₃ய, பெரிய, பெரிய தேவர்கள், அவர்களால் எம்பெருமானை சமாதானப்படுத்த முடியவில்லை. அவர் கோபத்துடன் இருந்தார். ஏவம் ஸுராதய: ஸர்வே ப்ரஹ்ம-ருத்ர-புர: ஸரா: (SB 7.9.1). பெரிய, பெரிய புருஷர்கள், ருத்ர, ந உபைதும். ந உபைதும் அஷ₂கன் மன்யு. அவர்களால் அவரை சமாதானப்படுத்த முடியவில்லை, அத்துடன் ஸம்ரம்ப₄ம் ஸுது₃ராஸத₃ம். ஸுது₃ராஸத₃ம், மிகமிகக் கடினம். கிருஷ்ணரால் நாம் தண்டிக்கப்பட்டதும், மீண்டும் எழுவது மிகமிகக் கடினம். மூடா₄ ஜன்மனி ஜன்மனி (BG 16.20). ஜென்ம ஜென்மமாக நாம் தண்டிக்கப்படுவோம். அதுதான் நமக்குரிய தண்டனை. எனவே, கிருஷ்ணரை அதிருப்தியடையச் செய்யும் எதையும் செய்ய வேண்டாம். வெறுமனே பகவானின் சேவையில் ஈடுபடுங்கள். மிகவும் எளிமையான விஷயம். மன்-மனா ப₄வ மத்₃-ப₄க்தோ மத்₃-யாஜீ மாம் நமஸ்குரு (BG 18.65). எப்போதும் அவரைப் பற்றி நினையுங்கள். யாரையும், வேறு எதையும் நினைக்க வேண்டாம். ஸர்வோபாதி₄-விநிர்முக்தம் (CC Madhya 19.170). அன்யாபி₄லாஷிதா-ஷூ₂ன்யம் (Brs. 1.1.11). கிருஷ்ணருக்கான சேவையை தொடர முயற்சிக்கவும். இருபத்தி நான்கு மணிநேர சேவை உள்ளது, அதைப் பின்பற்ற முயற்சிக்கவும். அதை புறக்கணிக்காதீர்கள். அது உங்கள் வாழ்க்கையை வெற்றிகரமானதாக மாற்றும்.

மிக்க நன்றி.

பக்தர்கள்: ஜெய ஸ்ரீல பிரபுபாதா. (நிறைவு)