TA/Prabhupada 0666 – சூரியன் உமது அறையின் உள்ளே ஊடுறுவும்போது, கிருஷ்ணர் உமது இதயத்தை ஊடுறுவமாட்டாரா

Revision as of 07:52, 25 June 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 6.13-15 -- Los Angeles, February 16, 1969

தமால் கிருஷ்ணா: "அனைத்தும் பகவானுடைய ராஜ்ஜியம் தான். ஆனால் ஆன்மீக வானம் மற்றும் அதில் உள்ள கிரகங்கள் பரம் தாமம் அதாவது பரமனுடைய இருப்பிடம் என்று அழைக்கப்படுகிறது..."

பிரபுபாதர்: ஆமாம். இந்தப் பௌதீக உலகம் இறைவனின் படைப்பு தான். இதுவும் பகவானின் ராஜ்ஜியம்தான். ஆனால் நாம் பகவானை மறந்து விட்ட காரணத்தினால், நாம் பகவானை இறந்தவன் ஆக்கிவிட்டோம், அதனால் இது நரகமாகிப் போனது. ஆனால் நாம் கடவுளை ஏற்றுக் கொண்டால் இதுவும் ஆன்மீக உலகம் ஆகிவிடும். ஆகையால் தான் இந்தக் கோவிலும் ஆன்மிக உலகம். பௌதிக உலகம் இல்லை. பௌதீக உலகிற்கு அப்பாற்பட்டது. மேலே படியுங்கள்.

தமால் கிருஷ்ணா: "பகவான் கிருஷ்ணரை முழுமையாகப் புரிந்து கொண்ட திறன்மிகு யோகி, பகவான் கிருஷ்ணரால் இங்குத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது, உண்மையான அமைதியை அடைந்து கோலோக பிருந்தாவனம் எனப்படும் கிருஷ்ண லோகத்தை, பரலோகத்தை இறுதியாகச் சென்றடைகிறான். பிரம்ம சம்ஹிதையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. பகவான் தனது இருப்பிடமான கோலோகத்தில் வாசம் செய்தாலும் அவரே எங்கும் நிறைந்திருக்கும் பிரம்மன் மற்றும் அனைத்திற்குள்ளும் வியாபித்திருக்கும் பரமாத்மா."

பிரபுபாதர்: ஆம், கிருஷ்ணர் தனது இருப்பிடமான கோலோக விருந்தாவனத்தில் இருக்கிறார் என்று நீங்கள் நினைத்தால், அவர் எப்படி உங்கள் கோவிலிலும் இருக்கிறார் என்று நினைக்க முடியும்? இல்லை. பிரம்ம சம்ஹிதைக் கூறுகிறது... அதனால்தான் நாம் அங்கீகரிக்கப்பட்ட அன்னையிடமிருந்து கேட்க வேண்டும். பிரம்ம சம்ஹிதை சொல்கிறது கோலோக ஏவ நிவஸத்யகிலாத்ம-பூத: (பிரம்ம சம்ஹிதை 5.37) அவர் தனது இருப்பிடமான கோலோக பிருந்தாவனத்தில் வசித்தாலும் அவர் எங்கும் இருக்கிறார். அவர் எங்கும் இருக்கிறார். அதே எடுத்துக்காட்டைப் பயன்படுத்தலாம். அதாவது சூரியன் 90 மில்லியன் மைல் அல்லது அது போன்ற ஒன்று, நம்மிடமிருந்து தொலைவில் இருக்கிறது. ஆனால் அது நம் அறைக்குள்ளும் உள்ளது. இல்லையெனில், "ஓ, சூரிய ஒளி இங்கே உள்ளது" என்று நீங்கள் எப்படி சொல்கிறீர்கள்? சூரியனால் உன்னுடைய அறையில் ஊடுருவ முடியும் என்றால், கிருஷ்ணர் உன்னுடைய இதயத்திலும், அறைக்குள்ளும், ஒவ்வொரு மூலையிலும் ஊடுருவ முடியாதா? அவர் தேவையற்றவரா? அவர் எங்கும் இருக்கிறார். அவர் எப்படி எங்கும் இருக்கிறார் என்பதை தான் நாம் உணர வேண்டும். மேலே படியுங்கள்.

தமால் கிருஷ்ணா: "யாராலும் ஆன்மீக வானையோ பகவானின் நித்திய வாசஸ்தலத்திற்குள்ளோ நுழைய முடியாது, கிருஷ்ணர் என்றால் என்ன அவருடைய விரிவங்கமான விஷ்ணு என்றால் என்ன என்பதை உணராமல் அடைய முடியாது. எனவே கிருஷ்ண உணர்வில் செயல்படும் ஒருவனே உன்னதமான யோகி. ஏனெனில் அவன் மனம் எப்போதும் கிருஷ்ணருடைய செயல்களிலேயே ஈடுபட்டு இருக்கின்றது. வேதங்களில் நாம் படிக்கிறோம், 'பிறப்பு இறப்பை கடப்பதற்கு ஒருவர் முழுமுதற் கடவுளைப் பற்றி உணர வேண்டும்.' வேறுவிதமாகக் கூறினால், யோக முறையின் உன்னத நிலை என்பது பௌதீக வாழ்விலிருந்து முக்தி அடைவது தான். மாறாக அப்பாவி மக்களை ஏமாற்றும் மாய மந்திரமோ தந்திரமாே அல்ல."

பிரபுபாதர்: நன்றி, அவ்வளவுதான். (முடிவு)