TA/Prabhupada 0712 – கிருஷ்ணர் ஆணையிட்டார் – “மேற்கத்திய தேசம் சென்று, அவர்களுக்கு போதனைசெய்” என்று: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0712 - in all Languages Category:TA-Quotes - 1974 Category:TA-Quotes - Lec...")
 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 8: Line 8:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0711 - Kindly What You Have Begun, Do Not Break It - Continue It Very Jubilantly|0711|Prabhupada 0713 - The Busy Fool is Dangerous|0713}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0711 - எதை தொடங்கி இருக்கிறீரோ அதை நிறுத்தாதீர்கள், மகிழ்ச்சியுடன் தொடர்ந்து செய்யுங்கள்|0711|TA/Prabhupada 0713 – பரபரப்பாய் இருக்கும் முட்டாள் ஆபத்தானவன்|0713}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:55, 28 June 2021



Lecture on SB 1.16.22 -- Hawaii, January 18, 1974

நீங்கள் கிருஷ்ண உணர்விற்கு வரும்பொழுது, உங்களுடைய வாழ்க்கை பக்குவம் அடைகிறது. மேலும் முழுமையான கிருஷ்ண உணர்வில், நீங்கள் உங்கள் உடலை விட்ட பின்னர்- த்யக்த்வா தே3ஹம்' புனர் ஜன்ம நைதி (ப.கீ 4.9)அதற்கு மேல் எந்த ஜட உடலும் இல்லை. எனவே இதுதான் கிருஷ்ண பக்தி இயக்கம் மேலும் இது வழிகாட்டிகளான குரு, தந்தை, அரசாங்கம் போன்றவர்களின் கடமையாகும், அவர்கள் தங்களுடைய பாதுகாப்பின் கீழ் வாழ்பவர்களின் நலனை கருத வேண்டும், அதாவது, அவர்களின் கிருஷ்ண உணர்வை வளர்ப்பது. அதுதான் அவர்களுடைய கடமை. எனவே அந்தக் கடமை செய்யப்படாத போது....... உதாரணத்திற்கு, நான் இங்கே இவ்வளவு தூரம் வர எந்த தேவையும் இல்லை. நான் விருந்தாவனத்தில் அமைதியாக வாழ்ந்து இருக்கலாம், இன்னும் ராதா தாமோதர கோயிலில் இரண்டு அறைகள் உள்ளன. ஆனால் கிருஷ்ண உணர்வு உள்ளதால்..... கிருஷ்ண உணர்வு என்றாலே பகவானுக்கு சேவை செய்வது என்று பொருள். அதுதான் கிருஷ்ண உணர்வாகும். எனவே கிருஷ்ணர் ஆணையிட்டார், "நீ இங்கே அமைதியாக எந்த கவலையும் இன்றி உட்கார்ந்து இருக்கிறாய். இல்லை. நீ இப்போது மேற்கத்திய நாடுகளுக்கு சென்று அவர்களுக்கும் கற்றுக்கொடு." எனவே இதுவும் கிருஷ்ண உணர்வு தான், முதிர்ந்த கிருஷ்ண உணர்வு, அதாவது கிருஷ்ண உணர்வை பற்றி அறியாமல் இருப்பவர்களுக்கான சேவை. அதுவும் நல்லது ஏனென்றால் வியாச தேவர் மாயை, இருள் அல்லது நிழலைப் போன்ற மாயா சக்தியையும் கண்டார்..... யயா ஸம்மோஹிதோ ஜீவ. இந்த மொத்த உலகமும், எல்லா உயிர்களும், பந்தப்பட்ட ஆத்மாக்களும், மாயையினால் குழப்பமடைந்திருக்கிறார்கள். யயா ஸம்மோஹிதோ ஜீவ ஆத்மானம்' த்ரி-கு3ணாத்மகம் (ஸ்ரீ. பா. 1.7.5). முட்டாளும் மூடனுமானவன் இந்த உடலயே தான் என்று நினைக்கிறான்.யஸ்யாத்ம-புத்தி: குணபே த்ரி-தாதுகே (ஸ்ரீ.பா. 10.84.13). "நான் இந்த உடல்" என்று நினைப்பவன் நாயையும் பூனையையும் விட மேலானவன் அல்ல. அவன் மிக நன்றாக உடுத்தி இருந்தாலும், அவன் ஒரு நாய், அவன் ஒரு பூனை அவ்வளவுதான். மிருகத்தை விட மேலானவன் அல்ல. காரணம் அவனுக்கு தன்னைப் பற்றிய அறிவு இல்லை. (அந்தப் பக்கம் திரும்பி)அதைச் செய்ய வேண்டாம். யஸ்யாத்ம-புத்தி: குணபே த்ரி-தாதுகே... (அந்தப் பக்கம் திரும்பி) இப்படி உட்கார முடியாதா? ஆம். ஸ்வ-தீ: கலத்ராதிஷு பௌம இஜ்ய-தீ:. இது தான் நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் பூனைகளையும் நாய்களையும் போல "நான் இந்த உடல்" என்று நினைத்து குழப்பத்தில இருக்கின்றனர். "இந்த உடலிலிருந்து அல்லது இந்த உடல் சம்பந்தப்பட்டவைகள், என்னுடையவை." ஸ்வ-தீ: கலத்ராதிஷு. "எனக்கு இந்தப் பெண்ணுடன் ஒரு சம்பந்தம், உடல்ரீதியான சம்பந்தம் உள்ளது. எனவே "இவள் என்னுடைய மனைவி அல்லது என்னால் பாதுகாக்கப்படுபவள்," இப்படி ஏதாவது. குழந்தைகளும்- இதுபோலத்தான் உடல்சார்ந்தது. அவர்களுக்கு ஆத்மாவைப் பற்றி எந்த அறிவும் இல்லை, வெறுமனே உடல் மட்டும்தான். "ஆக இந்த உடல், குறிப்பிட்ட நாட்டில் பிறந்து உள்ளது. எனவே நான் நாட்டுப்பற்று உடையவன்." பௌம இஜ்ய-தீ:. குறிப்பிட்ட நாட்டிற்காக அவர்கள் தங்களுடைய பலவற்றை, தங்கள் சக்தியை தியாகம் செய்கிறார்கள் ஏனென்றால் தற்செயலாக, இந்த வாழ்வில் அவன் இந்த நாட்டில் பிறந்து உள்ளான். இவை எல்லாம் பாகவதத்தில் விளக்கப்பட்டுள்ளது. யஸ்யாத்ம-புத்தி: குணபே த்ரி-தாதுகே ஸ்வ-தீ: கலத்ராதிஷு பௌம இஜ்ய-தீ: (ஸ்ரீ.பா. 10.84.13). பௌம என்றால் நிலம், நாடு. எனவே இதுதான் நடந்துகொண்டு இருக்கிறது. இது தான் மாயை என்று கூறப்படுகிறது. இவற்றுடன் அவனுக்கு எந்த தொடர்பும் இல்லை. "இந்த உடலுடன், இந்த நாட்டுடன், எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை, இந்த மனைவி, இந்த குழந்தைகள், இந்த சமூகம்..... இவை அனைத்தும் மாயையே..." என்று உணர்வது தான் விடுதலை எனப்படுகிறது.