TA/Prabhupada 0818- நன்மையான அடித்தளத்தில் நீங்கள் நல்லதையே அறிந்துக்கொள்வீர்கள்: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0818 - in all Languages Category:TA-Quotes - 1968 Category:TA-Quotes - Lec...")
 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 8: Line 8:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0817 - Simply Stamping 'I am Christian,' 'I am Hindu,' 'I am Muslim,' there is No Profit|0817|Prabhupada 0819 - Asrama Means Situation for Spiritual Cultivation|0819}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0817 - நான் கிறிஸ்துவன், நான் ஹிந்து, நான் முஸ்லிம் என்று முத்திரைக் குத்திக்கொள்வதில் பயனில|0817|TA/Prabhupada 0819 - ஆஸ்ரம என்றால் ஆன்மிக அறுவடைக்கான சூழ்நிலை என்று பொருள்|0819}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:42, 13 August 2021



Lecture on SB 7.9.8 -- Seattle, October 21, 1968

தமால் கிருஷ்ணா: சத்வ குணத்திற்குள் நாம் எப்படி நுழைவது?

பிரபுபாதர்: நான் கூறியுள்ள நான்கு விதிமுறைகளை மட்டும் கடைபிடியுங்கள்: மது, மாமிசம், தகாத உறவு, சூதாட்டம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். அவ்வளவுதான் இதுவே சத்துவம். இந்தக் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஏன்? உங்களைச் சத்வத்தில் வைத்துக் கொள்வதற்கு தான். அனைத்து மதங்களிலும் இருக்கிறது... இப்போது நான் அதனைப் பத்து கட்டளைகளிலும் பார்த்தேன், "நீ கொல்லக் கூடாது." அதே கொள்கை அதில் இருக்கிறது. ஆனால் மக்கள் அதனைக் கேட்பதில்லை. அது வேறு விஷயம். சத்துவ குணத்தில் நிலைபெறாத யாருமே தர்மவானாக இருக்க முடியாது. ரஜோ குணத்தில் இருப்பவரோ தமோ குணத்தில் இருப்பவரோ, அவர்கள் தர்மத்தின் தளத்திற்கு உயர்வதில்லை. தர்மத்தின் தளம் என்பது சத்துவத்தில் உள்ளது. இதனை நீங்கள் புரிந்துகொள்ளலாம். சத்துவ குணத்தின் தளத்தில், நீங்கள் அனைத்து நன்மைகளையும் புரிந்து கொள்ள முடியும். தமோ குண தளத்திலோ ரஜோ குண தளத்திலோ இருந்தால், அனைத்து நன்மைகளையும் நீங்கள் எப்படி புரிந்து கொள்ள முடியும்? அது சாத்தியமில்லை. எனவே ஒருவர் தன்னை சத்துவத்தில் நிலைபெற்று வைத்திருக்க வேண்டும். சத்துவம் என்பது இந்தத் விதிமுறைகளைக் கடைபிடிப்பது. அந்தப் பத்து கட்டளைகளைக் கடைபிடியுங்கள் அல்லது இந்த நான்கு கட்டளைகளைக் கடைபிடியுங்கள், இரண்டும் ஒன்றுதான். அதாவது நீங்கள் உங்களைச் சத்வத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். சத்வத்திலேயே சமநிலை இருக்க வேண்டும். பகவத்கீதையில் பரம் ப்ரஹ்ம பரம் தாம பவித்ரம் பரமம் பவான் (பகவத் கீதை 10.12). அர்ஜுனன் கிருஷ்ணரை மிக உத்தமமான தூய பரம்பொருளாக ஏற்றுக்கொண்டான். அத்தகைய தூய பரம்பொருளை நாம் தூய்மையாக இல்லாதபோது எப்படி அணுக முடியும்? எனவே தூய்மை அடைவதற்கு இதுவே முதல் படி, ஏனெனில் நாம் அசுத்தமாக இருக்கின்றோம். தூய்மை அடைவதற்கு... ஏகாதசி, நாம் ஏன் கடைபிடிக்கின்றோம்? தூய்மை அடைவதற்கு தான். பிரம்மச்சாரிய தபஸ்ய, எளிமை, தவம், பிரம்மச்சரியம், மனதை எப்போதும் கிருஷ்ண உணர்வில் வைப்பது, உடலைத் தூய்மையாக வைத்தல்- இவை நம்மைச் சத்வத்தில் வைத்துக் கொள்ள உதவும். சத்துவம் இல்லாமல் இது சாத்தியமில்லை. ஆனால் கிருஷ்ண உணர்வு ரஜோ குணம் தமோ குணத்தில் இருப்பவரைக் கூட, சத்துவ குணத்திற்கு உடனடியாக உயர்த்தும் தன்மை உடையது. அதற்கு இந்தக் கட்டுப்பாட்டு விதிமுறைகளைக் கடைப்பிடித்து ஹரே கிருஷ்ண ஜபம் செய்ய வேண்டும். ஹரே கிருஷ்ண ஜபமும் கட்டுப்பாட்டு விதிமுறைகளைக் கடைபிடிப்பதும் நம்மைச் சத்வத்தில் வைத்திருக்கும். நிம்மதியாக இருக்கலாம். வீழ்ச்சி இல்லை. இது கடினமானதா என்ன? பரவாயில்லை.