TA/Prabhupada 0825 - மனித வாழ்வு கிருஷ்ணரின் மலரடியை தொடர்பு கொள்வதற்கான முயற்சிகளுக்காக மட்டுமே: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0825 - in all Languages Category:TA-Quotes - 1974 Category:TA-Quotes - Lec...")
 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 8: Line 8:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0824 - In the Spiritual World there is No Disagreement|0824|Prabhupada 0826 - Our Movement is Transferring that Hard Working to the Business of Krsna|0826}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0824 - ஆன்மிக உலகில் கருத்து வேறுபாடுகள் இல்லை|0824|TA/Prabhupada 0826 - நமது இயக்கம் கடின உழைப்பை கிருஷ்ணருக்கான பணியாக மாற்றுகிறது|0826}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:24, 22 July 2021



741102 - Lecture SB 03.25.02 - Bombay

வேதங்களில் கூறப்பட்டிருக்கிறது,

நித்யோ நித்யானாம் சேதனஷ் சேதனானாம்
ஏகோ பஹூனாம் யோ விததாதி காமான்
(கட உபனிஷத் 2.2.13).

பகவானின் வைபவங்கள் என்ன? ஏகோ பஹூனாம் யோ விததாதி காமான். பகவான் என்பது ஒருமை, நித்யோ நித்யானாம், அந்த் நித்யானாம், என்பது பன்மை.

ஜீவர்கள் ஆகிய நாம் பன்மை. ஜீவ-பாக: ஸ விஜ்ஞேய: ஸ சானந்த்யாய கல்பதே. எத்தனை ஜீவாத்மாக்கள் இருக்கும் அளவிட முடியாது. எண்ண முடியாது. ஆனந்த். ஆனந்த என்றால் எல்லை காண முடியாது, அதாவது "பல ஆயிரக்கணக்கான பல கோடி அளவு" இல்லை. அதனை எண்ணவே முடியாது. ஜீவாத்மாக்கள் ஆகிய நம்மை பரிபாலனம் செய்வது அது ஒன்றே. இதுவே வேத கருத்து. ஏகோ பஹூனாம் யோ விததாதி காமான். நம் குடும்பத்தை பராமரிப்பது போன்றது. ஒருவர் பணம் சம்பாதித்தால் அவன் தனது குடும்பம் மனைவி குழந்தைகள் வேலைக்காரர்கள் தன்னை சார்ந்த உள்ளவர்கள் அனைவரையும் பராமரிக்கிறார். அது போலவே, அந்த ஒரே பகவான் அனைத்து உயிர்களையும் பராமரிக்கிறார். எவ்வளவு இருக்கிறது என்று சொல்ல முடியாது. ஆப்பிரிக்காவில் மட்டும் கோடிக்கணக்கான யானைகள் உள்ளன. அவையும் ஒரே நேரத்தில் 40 கிலோ உணவை உண்கின்றன. அவையும் பராமரிக்கப்படுகின்றன. சிறு எறும்பு கூட பராமரிக்கத்தான் படுகிறது. 84 லட்சம் விதமான உயிரினங்கள் உள்ளன. அவற்றை யார் பராமரிக்கிறார். பகவான் ஒருவரே. ஏகோ பஹூனாம் யோ விததாதி காமான். அது உண்மை. பின்னர் அவர் ஏன் நம்மை பராமரிக்க மாட்டார்? அதுவும் முக்கியமாக அவருடைய திருவடிகளில் சரண் அடைந்த பக்தர்களை, அனைத்தையும் விடுத்து அவருடைய சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் பக்தர்களை ஏன் பராமரிக்க மாட்டார்?

நம் கிருஷ்ண பக்தி இயக்கத்தை போல. நமக்கு நூற்றுக்கும் மேற்பட்ட மையங்கள் உள்ளன. ஒரு மையத்தில்... நவபாரத் டைம்ஸில் வந்திருந்த ஒரு அறிக்கையை படித்தோம், அது எப்படி நன்றாகப் பராமரிக்கப்படுகிறது என்பது பற்றி. ஆனால் நமக்கு எந்த தொழிலும் கிடையாது. வருவாய்க்கு வழி கிடையாது. கிருஷ்ணரின் அடைக்கலம் என்பது மட்டுமே நமது வருவாய்க்கு வழி. ஸமாஷ்ரிதா யே பத-பல்லவ-ப்லவம். அதனால்தான் சாஸ்திரம் சொல்கிறது "கிருஷ்ணரிடம் அடைக்கலம் கொள்." என்று. கிருஷ்ணரும் அதே உண்மையை தான் சொல்ல வருகிறார். . ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ (ப.கீ. 18.66). "நீ இதைச் செய் அதைச் செய் நான் உன் பராமரிப்புக்கு இதனை தருகிறேன்." என்று அவர் சொல்லவில்லை. அஹம் த்வாம் ஸர்வ-பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி: "உன்னைப் பராமரிப்பது மட்டுமின்றி, இறுதியாக ஏற்படும் பாவத்தின் விளைவுகளில் இருந்தும் உன்னை பாதுகாக்கிறேன்." ஆகவே சாஸ்திரம் மேலும் சொல்வது, தஸ்யைவ ஹேதோ: ப்ரயதேத கோவிதோ ந லப்யதே யத் ப்ரமதாம் உபர்யத: (ஸ்ரீ.பா. 1.5.18). தஸ்யைவ ஹேதோ: ப்ரயதேத கோவித:. கோவித என்றால் மிகவும் புத்திசாலியான மிகவும் புத்திசாலியான மனிதன். அவன் எதனை முயற்சி செய்யவேண்டும்? தஸ்யைவ ஹேதோ: கிருஷ்ணரின் தாமரை திருவடிகளைச் சரண் அடைவதை. கிருஷ்ணரின் தாமரைத் திருவடிகளை எவ்வாறு அடைவது என்பதே மனித வாழ்க்கையின் ஒரே முயற்சியாக இருக்க வேண்டும். அது மட்டுமே நமது தொழிலாக இருக்க வேண்டும்.