TA/Prabhupada 0870 - ஒரு க்ஷத்திரியனின் கடமை நம்மை காப்பாற்றுவதும், பாதுகாப்பதும் தான்: Difference between revisions

 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 8: Line 8:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0869 - The Population is Busy Foolish. So We are Creating Lazy Intelligent|0869|Prabhupada 0871 - The Kings were Governed by First-class Brahmanas, Sages|0871}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0869 - இந்த மக்கள் தொகை பிஸியாக இருக்கும் முட்டாள்கள்.அதனால் நாங்கள் சோம்பேறித்தனமான அறிவாள|0869|TA/Prabhupada 0871 - மன்னர்களை, அனுபவம் உள்ள ப்ராமணர்களும், ரிஷிகளும் ஆட்சியில் உதவி செய்தார்கள்|0871}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:28, 7 August 2021



750519 - Lecture SB - Melbourne

இந்த உரையாடல் மஹாராஜா பரீக்ஷித்துக்கும் சுகதேவ் கோஸ்வாமிக்கும் இடையே நடந்தது. ஐயாயிரம் வருடத்துக்கு முன் மஹாராஜா பரீக்ஷித் இந்த உலகத்தை ஆண்டு வந்தார். முன்னால், அதாவது ஐயாயிரம் வருடத்துக்கு முன்னர், இந்த உலகம் ராஜாவால் ஆட்சி செய்யப்பட்டது அவர்களது தலைமையகம் ஹஸ்தினாபூரா, புதுதில்லி. ஒரு கொடி, ஒரு ஆட்சியாளர், ஒரு இலக்கியம், ஒரு வேத இலக்கியம், மற்றும் ஆர்யர்கள். ஆர்யர்கள், அவர்கள் தான் நாகரீகமானவர்கள். நீங்கள், ஐரோப்பியர்களும், அமேரிக்கர்களும், ஆர்யர்கள் தான், இந்திய-ஐரோப்பிய கூட்டம். மஹாராஜா யயாதி, மஹாராஜா பரீக்ஷித்தின் பேரன், அவரது இரண்டு பிள்ளைகளுக்கு கிழக்கு ஐரோப்பா, கிரேக்கம் மற்றும் ரோமின் ஒரு பகுதியை கொடுத்தார். அதுதான் வரலாறு, மஹாபாரத. மஹாபாரத என்றால் சிறந்த இந்தியா ஆகும். வெவ்வேறு மதங்கள் இல்லை, ஒரேயொரு மதம்தான்: வேத மதம். வேத மதம் என்றால் நித்தியமான முழுமுதற் கடவுளை, உண்மை என்று நம்புபவர்கள். இதுவே வேத மதம். எவர் பகவத் கீதையை படித்திருக்கிறார்களோ.... அதில் பதினைந்தாவது அத்தியாயத்தில், வேதைஸ் ச ஸர்வைர் அஹம் ஏவ வேத்யம் (ப.கீ.15.15) என்கிறது. வேத அறிவு என்றால் கடவுளை நன்கு அறிவதுதான். அதுவே வேத மதம் ஆகும்.

பின்னர், கலியுகத்தின் முன்னேற்றத்தால்.... கலியுகம் என்றால் கருமையான காலம், அல்லது பாவங்கள் மிகுந்த யுகம், அல்லது சண்டைகள், சச்சரவுகள், விவாதங்கள் நிறைந்தது. அதுவே கலியுகம். அதுதான் இப்பொழுது நடந்துக் கொண்டிருக்கிறது. இதே கடந்த ஐயாயிரம் வருடங்களாக, இருந்துக் கொண்டிருக்கிறது கலியுகம், கலியுகம் ஆரம்பமே பசுமாட்டை கொல்வதிலிருந்து ஆரம்பமானது. மஹாராஜா பரீக்ஷித் உலகத்தை சுற்றி வரும் பொழுது, ஒரு கருப்பு நிறமானவன் பசுமாட்டை கொல்ல முற்படுவதை கண்டார். மஹாராஜா பரீக்ஷித் இதை பார்த்த உடனே.. அந்த பசு கொல்லப்படுவதற்கு பயந்து நடுங்கிக் கொண்டிருந்தது. உடனே மஹாராஜா பரீக்ஷித் "யார் அங்கே, என் ராஜ்யத்தில் பசுவை வதைப்பது?" என்று கோபமாக குரல் கொடுத்தார். உடனடியாக அவரது வாளை எடுத்து விட்டார். அதுதான் ஒரு க்ஷத்ரியன். க்ஷத்ரியன் என்றால்... க்ஷத் என்றால் புண், த்ரயதே என்றால்-அதுவே க்ஷத்ரியன். மற்றவர்களுக்கு துன்பம் கொடுப்பதே சிலருக்கு வேலையாக இருக்கிறது. இப்பொழுது அதிகரித்து இருக்கிறது. ஆனால் மஹாராஜா பரீக்ஷிதின் ஆட்சியில் அதற்கு அனுமதியே இல்லை. ராஜாதான் முழு பொருப்பு. அவர் கீழ் வேலை செய்பவர்களுக்கு அவரே பொருப்பு, விலங்கினமோ, மனித இனமோ, அவனை தொந்தரவு செய்ததில்லை, அது அவனுக்கு சொந்தமானது என்ற நம்பிக்கை. ஒரு க்ஷத்திரியனின் கடமை நம்மை காப்பாற்றுவதும், பாதுகாப்பதும் தான். அதுவே அப்போது உள்ள அரசாங்கத்தின் அமைப்பு. அது ஒரு பெரிய கதை. பரீக்ஷித் மஹாராஜா மிகவும் தெய்வ பக்தி உடையவர். அதுதான் அமைப்பு.