TA/Prabhupada 0933 - கிருஷ்ண பக்தி இயக்கம், மக்கள் மிருக வாழ்க்கைக்கு வீழ்ச்சி அடைவதிலிருந்து காப்பாற்றுக: Difference between revisions

 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 9: Line 9:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0932 - Krsna Does Not Take Birth, but it Appears Like That to Some Fools|0932|Prabhupada 0934 - Do Not Care to Look After the Necessity of the Soul, That is Foolish Civilization|0934}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0932 - கிருஷ்ணர் பிறப்பெடுப்பதில்லை, ஆனால் சில முட்டாள்களுக்கு, அது போல தோன்றுகிறது|0932|TA/Prabhupada 0934 - ஆத்மாவின் தேவைகளைக் குறித்து கவலைப்படுவது, இது முட்டாள்தனமான நாகரிகம்|0934}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:36, 7 August 2021



730424 - Lecture SB 01.08.32 - Los Angeles

பிரபுபாதர்: கிருஷ்ணர், தேவகியை புகழ்பெற செய்வதற்காக, தேவகியின் மகனாக வந்து தோன்றினார். கிருஷ்ணர், தன் பக்தையான யசோதையை புகழ் பெறச் செய்வதற்காக, யசோதையின் மகனாக தோன்றுகிறார். அதைப்போலவே, கிருஷ்ணர் மகாராஜா யதுவின் வம்சத்தில் தோன்றியது, அவர்களை புகழ்பெற செய்வதற்காகவே. அவர் பெரும் கிருஷ்ண பக்தர்..... அவர் மகாராஜா யதுவின் குலத்தில் பிறந்தார். அந்தக் குலம் இன்றும் புகழப்படுகிறது : யாதவ. யாதவ என்பது கிருஷ்ணரின் பெயர். காரணம் அவர் யது குலத்தில் பிறந்தார். ஆக, கிருஷ்ணர் எப்படி பிறப்பெடுக்க......? அந்தக் குலத்தை புகழ்பெற செய்வதற்காகவே. மிகச்சரியான இந்த உதாரணம் அளிக்கப்பட்டுள்ளது: மலயஸ்யேவ சந்தனம் (ஸ்ரீ. பா. 1.8.32). சந்தனம். இது ஒரு மரம். ஒரு மரம் எங்கு வேண்டுமானாலும் வளரலாம், ஆனால் சந்தன மரம், மலேசிய நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்றதனால்.... முற்காலத்தில் சந்தன மரங்களை அவர்கள் வளர்த்தனர், காரணம், நான் முன்பே கூறியபடி, நல்ல தேவை, குறிப்பாக இந்தியாவில் சந்தனத்திற்கு நல்ல தேவை இருந்தது. இப்போது..... அவர்கள் ரப்பர் மரங்களை வளர்கின்றனர், காரணம் இப்போது ரப்பருக்கு நல்ல தேவை உள்ளது.

ஆக, வியாபாரத்திற்கு பின்னும்...... குந்திதேவி இந்த மிக நல்ல உதாரணத்தை அளிக்கிறார். இந்த சந்தன மரம், இது ஒரு குறிப்பிட்ட வகை மரம். இது எங்கு வேண்டுமானாலும் வளரலாம். மலேசியாவில் அல்லது மலய பர்வதத்தில் மட்டும்தான் வளர வேண்டும் என்று அவசியம் இல்லை. அப்படி சட்ட திட்டம் எதுவும் இல்லை. அது எங்கு வேண்டுமானாலும் வளரலாம். ஆனால் சந்தன மரம் உலகின் இந்தப் பகுதியில் பெரும்பான்மையாக வளர்க்கப்பட்ட படியால், சந்தன மரம், மலய சந்தனம் என்று அறியப்படுகிறது. மலய சந்தனம்.

உங்கள் மேற்கத்திய நாடுகளில், வாசனை திரவியங்கள் இருப்பதைப்போல: யூடிகோலன். யூ டி கோலன். கோலன் என்பது பிரான்ஸ்சில் உள்ள ஒரு நாடு...? மேலும் அங்கே தயாரிக்கப்படுவதால், அதன் பெயர் யூடிகோலன். யூடிகோலன் எங்க வேண்டுமானாலும் தயாரிக்கப் படலாம், ஆனால் உண்மையில் இது கோலன் நகரில் தயாரிக்கப்பட்டது, எனவே யூடிகோலன் என்று அறியப்பட்டது. அதைப்போலவே சந்தன மரம் எங்கு வேண்டுமானாலும் வளரலாம், ஆனால் உண்மையில் இது மலேசியாவில் மிகுந்த பிரசித்தி பெற்றதனால்...

இப்போது, இந்தப் பிரார்த்தனை குந்தியால் 5,000 வருடங்களுக்கு முன்பு அளிக்கப்பட்டது. அதாவது 5,000 வருடங்களுக்கு முன், சந்தனமரம் மலேசியாவில் வளர்க்கப்பட்டு வந்தது. எனவே இந்த மலேசியா என்பது புதுமையான பெயர் ஒன்றும் அல்ல. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே அறியப்பட்டிருந்தது. மேலும் இந்த இடங்கள் எல்லாம், வேத நாகரிகத்தில் இருந்தன. எனவே, அதைப் போலவே அவர் இந்த உதாரணத்தை அளிக்கிறார், அதாவது.... கிருஷ்ணர் குறிப்பிட்ட குடும்பத்திலோ அல்லது குறிப்பிட்ட நாட்டில் தான் பிறக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. அவருக்கு அத்தகைய கடமைகள் எதுவும் இல்லை. ஆனால் குறிப்பிட்ட குடும்பத்தை அல்லது குறிப்பிட்ட நபரை, அவர் தன்னுடைய பக்தர் என்பதால் அவரை புகழ்பெற செய்வதற்காக, அவர் பிறக்கிறார்.

இதுதான் அவர் பிறப்பதற்கான காரணம்.... எனவே இது உன்னதமானது என்று அழைக்கப்படுகிறது. அவருக்கு எந்தக் கடமையும் இல்லை. ஆனால் நாம் கட்டாயப் படுத்தப்பட்டுள்ளோம். இதுதான் அவரது பிறப்பிற்கும் நம்முடைய பிறப்பிற்குமான வித்தியாசம். நாம் கட்டாயப் படுத்தப் பட்டுள்ளோம். நமது கர்மாவினால், நமது செயல்களினால், ஒரு நல்ல குடும்பத்தில் பிறப்பதற்கு நாம் தகுதியுடன் இருந்தால், பிறகு நாம் நல்ல குடும்பத்தில் அல்லது மனித சமுதாயத்திலோ, தேவர்களின் சமூகத்திலோ பிறப்போம். ஆனால், என்னுடைய செயல்கள் மிருகங்களைப் போல தாழ்ந்ததாக இருந்தால், பிறகு நான் விலங்குகளின் குடும்பத்தில் பிறக்க வேண்டியிருக்கும். அது கட்டாயப் படுத்தப்படும். கர்மணா தைவ-நேத்ரேண ஜந்துர் தேஹ உபபத்தயே (ஸ்ரீ. பா. 3.31.1). நம்முடைய கர்மாவை பொறுத்து, நாம் குறிப்பிட்ட வகையான உடலை அடைகிறோம்.

இந்த வாழ்க்கை...... இந்த மனிதப் பிறவி அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா என்பதற்காகவே, உன்னதத்தை, பூரண உண்மையை புரிந்து கொள்வதற்காகத் தான். ஆனால் நாம் அப்படி செய்யவில்லை என்றால், நாம் வெறும் மிருகமாக மட்டும் இருந்தால், பிறகு நாம் திரும்ப மிருக வாழ்க்கைக்கு செல்கிறோம். வாய்ப்பை தவறாக பயன்படுத்துதல். பிறகு நாம்..... எனவே இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் மக்களை, மிருக வாழ்க்கைக்கு வீழ்ச்சி அடைவதிலிருந்து காப்பாற்றுகிறது.

மிக்க நன்றி.

பக்தர்கள் : ஹரே கிருஷ்ண, எல்லா புகழும் ஸ்ரீல பிரபுபாதாவுக்கே!