TA/Prabhupada 0971 - உடல் ரீதியாகவே வாழ்க்கையைப் பார்க்கும் வரை நாமும் மிருகமும் ஒன்றுதான்: Difference between revisions

 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 9: Line 9:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0970 - Tongue Should be used Always for Glorifying the Supreme Lord|0970|Prabhupada 0972 - Try to Understand 'What kind of body am I going to get next?'|0972}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0970 - நாக்கு பகவானை போற்றுவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்|0970|TA/Prabhupada 0972 - "எனக்கு எந்தவிதமான உடல் கிடைக்கப்போகிறது?"என்று புரிந்து கொள்ளுங்கள்|0972}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:31, 16 August 2021



730400 - Lecture BG 02.13 - New York

யோகிகள் கூட உடற்பயிற்சிகளின் மூலமாகத்தான் புரிந்துகொள்ள முயற்சி செய்கின்றனர். ஞானியும் "தான் இந்த உடல் அல்ல" என்று முற்றிலும் புரிந்து கொள்ளத்தான் முயற்சி செய்கின்றான். கர்மிகள் புரிந்துகொள்ள முடியாது. அவர்கள் விலங்குகளைப் போல. மிருகங்களால் தான் இந்த உடல் அல்ல என்று புரிந்து கொள்ள முடியாது.

கர்மிகள் ஞானிகள் யோகிகள் மூவருமே உண்மையில், மிருகங்களை விட சற்றே உயர்ந்தவர்கள். அவ்வளவுதான். அவர்கள் மிருக தளத்தில் தான் இருக்கிறார்கள், ஆனால் சற்றே உயர்ந்து. எனவே நான் இந்த உதாரணத்தை தான் கொடுப்பேன் நீங்கள் கேட்டிருக்கலாம் காய்ந்து போன மலம். இந்தியாவில், திறந்தவெளியில் தான் மலம் கழிப்பார்கள். வெயில் அடிப்பதால் மாலை வேளையில், மலத்தின் மேல்பக்கம் காய்ந்துவிடும். கீழ்பாகம் இன்னும் ஈரமாக இருக்கும். அதனைப் பார்த்து ஒருவர் சொன்னாராம் "இந்தப் பக்கம் நல்லது" என்று. அவருக்கு தெரியவில்லை. என்ன இருந்தாலும் மலம் மலம் தான் இந்தப் பக்கமோ அந்தப் பக்கமோ. இந்த அயோக்கியர்கள் உடல் ரீதியான சிந்தனையிலேயே இருக்கின்றார்கள், எனவே அவர்கள் "நான் தேசியவாதி", "நான் யோகி," என்றெல்லாம் நினைக்கிறார்கள். "நான் இது, நான் அது, நான் இது..." இப்படியாக. இதுவே தத்துவம்.

உடல் ரீதியான சிந்தனைகள் இருக்கும் வரை மிருகங்களும் நாமும் ஒன்றுதான். இதுதான் பாகவத தத்துவம். நீ மிருகம். யஸ்யாத்ம-புத்தி: குணபே த்ரி-தாதுகே.

யஸ்யாத்ம-புத்தி: குணபே த்ரி-தாதுகே
ஸ்வ-தீ: கலத்ராதிஷு பௌம இஜ்ய-தீ:
யத்-தீர்த-புத்தி: ஸலிலே ந கர்ஹிசிஜ்
ஜனேஷ்வபிஜ்ஞேஷு ஸ ஏவ கோ-கர:
(ஸ்ரீ.பா. 10.84.13).

கோ-கர: என்றால், கோ என்றால் பசு, கர: என்றால் கழுதை. மிருகங்கள். யார் அவை? யஸ்யாத்ம-புத்தி: குணபே த்ரி-தாது. த்ரி தாது - கபம் வாதம் பித்தம் ஆகியவை அடங்கிய பை. "நான் இந்த உடல்", என்று ஒருவர் நினைத்துக் கொண்டிருந்தால், நான் இந்த உடல் உடல் ரீதியான உறவுகள்..." உடல் ரீதியான உறவுகளில் குடும்பம், சமூகம், குழந்தைகள், மனைவி, நாடு, அனைத்தும் வருகிறது அதெல்லாம் நம்முடையது ஆகிறது. யஸ்யாத்ம-புத்தி: குணபே த்ரி-தா..., ஸ்வ-தீ:. ஸ்வ-தீ: அவர்கள் நம்முடையவர்கள் நான் அவர்களுடையவன் என்று நாம் நினைக்கிறோம். ஸ்வ-தீ: கலத்ராதிஷு. கலத்ர என்றால் மனைவி. மனைவியின் மூலம் குழந்தைகளை பெறுகிறோம் குடும்பத்தை வளர்க்கிறோம்.

சமஸ்கிருதத்தில் ஸ்திரீ என்ற வார்த்தைக்கு விரிவாக்குதல் என்று பொருள். நான் ஒன்றாக இருக்கிறேன். எனக்கு மனைவி வந்தவுடன் நான் இரண்டாகிறேன். அதன்பின் 3, 4, 5 அதுபோல. இதற்குத்தான் ஸ்திரீ என்று பொருள். இந்த விரிவாக்கம், பௌதிக விரிவாக்கம், உடல்ரீதியான விரிவாக்கம், மாயை. ஜனஸ்ய மோஹோ 'யம் அஹம் மமேதி (ஸ்ரீ.பா. 5.5.8). "நான் இந்த உடல், உடல் ரீதியான உறவுகள் அனைத்தும் என்னுடையது." என்ற சிந்தனையை இந்த மாயை அதிகரிக்கிறது. அஹம் மம. அஹம் என்றால் "நான்", மம என்றால் "எனது".