TA/Prabhupada 0974 - நம்முடைய உயர்வு மிக மிக சிறியது, நுண்ணியது. பகவானே உயர்ந்தவர்

Revision as of 08:26, 19 August 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


730408 - Lecture BG 04.13 - New York

சதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்
குண-கர்ம-விபாகஷ:
தஸ்ய கர்தாரம் அபி மாம்
வித்யகர்தாரம் அவ்யயம்
(ப.கீ. 4.13).

இந்த ஸ்லோகம் பகவத்கீதையில் உள்ளது. பகவத் கீதை பற்றி உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும். அது மிகப் பிரபலமான, ஞானம் அளிக்கும் புத்தகம். நாங்கள் பகவத்கீதையை அதன் உண்மை உருவில் வழங்குகிறோம். கிருஷ்ண பக்தி இயக்கம் என்பது பகவத் கீதை உண்மையுருவில் எந்த கலப்படமும் இன்றி வழங்குவதே ஆகும். கிருஷ்ணர் நான்கு விதமான மனிதர்களைப் பற்றிக் கூறுகிறார், சாத்தூர் வர்ண்யம்... சதுர் என்றால் "நான்கு", வர்ண என்றால் "சமுதாயத்தின் பிரிவுகள்". வரண என்பது நிறத்தையும் குறிக்கும் அதுபோல. நிறங்களில் கூட சிவப்பு, ஊதா, மஞ்சள் என்ற பிரிவுகள் உண்டு. அதுபோல மனித சமுதாயமும், அதன் குணத்திற்கு ஏற்றார்போல் பிரிக்கப்பட வேண்டும். குணத்திற்கு பெயரும் நிறம்தான். சதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண-கர்ம-விபாகஷ: (ப.கீ. 4.13). பௌதிக உலகத்தில் மூன்று குணங்கள் உள்ளன. மூன்று குணங்கள். அல்லது மூன்று நிறங்கள். சிவப்பு, ஊதா, மஞ்சள். இதனைச் சேருங்கள். எணபத்தி ஒன்று விதமான நிறங்கள் கிடைக்கும். மூன்று நிறங்கள், 3ன் மேல் 3 ஐப் பெருக்கினால் ஒன்பது ஆகும். 9 உடன் ஒன்பதை பெருக்கினால் 81 ஆகும். ஆக 8,400,000 விதமான உயிர்வாழிகள் உள்ளன. இத்தகைய குணங்களின் கலவையினால். இயற்கையும் பல்வேறு விதமான உடல்களை உருவாக்குகிறது, குறிப்பிட்ட குணத்துடன் உயிர்வாழி கொண்டுள்ள தொடர்பின் அடிப்படையில். உயிர்வாழிகள் கடவுளின் அங்க உறுப்புகள். கடவுள் மிகப் பெரிய நெருப்பு என்றால் உயிர் வாழிகள் அதிலுள்ள தீப்பொறிகள். தீப்பொறிகளும் நெருப்புதான். தீப்பொறிகளும்தான், ஒரு தீப்பொறி துணியில் பட்டாலும் எரிந்துவிடும். ஆனால் அது பெரும் நெருப்பைப் போன்று வலிமையானது அல்ல. அது போல தான், கடவுள் மிகவும் வலிமை வாய்ந்தவர். மிகப் பெரியவர். நாம் கடவுளின் அங்கம்தான். நம்முடைய உயர்வானது மிக மிகக் குறைவு நுண்ணியமானது. கடவுள் உயர்ந்தவர். அதனால்தான், அவர் மாபெரும் அண்டங்களை எல்லாம் படைத்திருக்கிறார். நம்மால் ஒரு அண்டத்தை கூட படைக்க முடியாது. வானம், விண்வெளி, காற்று மண்டலம் ஆகியவை கொண்ட இந்த மண்டலத்தை நாம் காண்கிறோம், கோடிக்கணக்கான நட்சத்திரங்களும், கிரகங்களும் இருக்கின்றன. அவை மிதக்கின்றன. அவை காற்றில் மிதக்கின்றன. அதனை அனைவரும் அறிவர்.