TA/Prabhupada 1065 - முதலில் ஒருவர் கற்க வேண்டியது அதாவது அவர் இந்த ஜட உடல் அல்ல என்பதை

Revision as of 09:16, 6 April 2015 by Rishab (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 1065 - in all Languages Category:TA-Quotes - 1966 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

660219-20 - Lecture BG Introduction - New York

இப்பொழுது நாம் ஜட செயல்களால் களங்கப் பட்டிருக்கும் பொழுது, அதை நம் நிபந்தனை நிலை என்றழைக்கிறோம். நிபந்தனை நிலை. மேலும் போலியான தற்பெருமை, அத்துடன் போலியான உணர்வுகள். போலியான உணர்வின் அபிப்பிராயத்தின் காட்சிப் பொருளாக அதாவது "நானும் இந்த ஜட இயற்கையின் ஒரு உற்பத்திப் பொருள்." அதைத்தான் போலியான தற்பெருமை என்றழைக்கிறோம். அனைத்து ஜட செயல்கள், யஸ்யாத்ம-புத்தி: குணபே த்ரி-தாதுகே (ஸ்ரீ.பா.10.84.13). யஸ்யாத்ம-புத்தி: குணபே த்ரி-தாதுகே, உடல் சார்ந்த எண்ணத்தில் மூழ்கியிருக்கும் ஒருவர். தற்பொழுது, பகவத்-கீதை முழுமையாக பகவானால் விவரிக்கப்பட்டதற்கு காரணம், அர்ஜுனர் தன்னை உடல் சார்ந்த எண்ணத்துடன் பிரதிநிதித்தார். ஆகையால் ஒருவர் தன் வாழ்க்கையின் உடல் சார்ந்த என்ணத்தை விடுத்து சுதந்திரமாக இருக்க வேண்டும். அதுவே விடுதலை பெறவும், முக்தி பெறவும் விரும்பும், உன்னத ஆன்மிகளுக்கான முன்னோட்ட செயல்கள். மேலும் அவர் தான் இந்த ஜட உடல் அல்ல என்பதை .முதன்முதலில் கற்க வேண்டும். ஆகையால் இந்த உணர்வு, அல்லது ஜட உணர்வு, நாம் இந்த ஜட உணர்விலிருந்து விடுதலை பேற்றால், அதை முக்தி என்றழைக்கிறோம். முக்தி அல்லது மோட்சம் என்றால் ஜட உணர்விலிருந்து விடுதலை பெறுவதாகும். ஸ்ரீமத் பாகவதத்திலும் மோட்சம் என்பதன் விளக்கம் கூறுவது: முக்திர் ஹித்வான்யதா ரூபம் ஸ்வரூபேண வ்யவஸ்திதி: (ஸ்ரீ.பா.2.10.6). ஸ்வரூபேண வ்யவஸ்திதி: . முக்தி என்றால் களங்கப்பட்ட உணர்வுடைய இந்த ஜட உலகிலிருந்து மோட்சம் பெற்று, மேலும் தூய்மையான உணர்வில் நிலைப்பாடாவது. மேலும் முழு அறிவுரை, பகவத் கீதையின் அறிவுரை, அந்த தூய்மையான உணர்வை விழிப்பூட்ட குறிவைத்துள்ளது. பகவத் கீதையில் அறிவுரையின் கடைசி அத்தியாயத்தில் நாம் அதைக் காணலாம் அதாவது கிருஷ்ணர் அர்ஜுனரை கேட்கிறார், அவர் இப்பொழுது தூய்மையான உணர்வோடு இருக்கின்றாரா என்று. இதுவரை அவர் தூய்மையான உணர்வோடு இருந்தாரா. அந்த தூய்மையான உணர்வு பகவானின் வழி காட்டுதலுக்கு ஏற்ப நடப்பதற்காகும். அதுதான் தூய்மையான உணர்வு. அதுதான் அனைத்தும் அடங்கிய தூய்மையான உணர்வு. உணர்வு ஏற்கனவே அங்கிருக்கிறது, ஏனென்றால் நாம் அங்க உறுப்புகளாக இருக்கிறோம், ஆகையினால் நாம் பாதிக்கப்படுகிறோம். ஜட குணத்தால் பாதிக்கப்படக் கூடிய இன உறவு அங்கிருக்கிறது. ஆனால் பகவான் நித்தியமானவராக இருப்பதால், அவர் பாதிக்கப்படமாட்டார். அவர் பாதிக்கப்படமாட்டார். அதுதான் பகவானுக்கும் முழுமுதற் கடவுளுக்கும் உள்ள வேறுபாடு. இப்பொழுது இந்த உணர்வு, இந்த உணர்வு என்பது என்ன? இந்த உணர்வானது அதாவது "நான் ஒரு." நான் என்பது என்ன? களங்கப்பட்ட உணர்வில் இருக்கும் பொழுது இந்த "நான் ஒரு" என்றால் அதாவது "நான் ஆய்வு செய்யும் அனைத்திற்கும் நானே பகவான்." இது தூய்மையற்ற உணர்வு. மேலும் "நான்தான் அனுபவிப்பவர்." ஜட உலகம் முழுவதும் இயங்கிக் கொண்டிருக்கிறது அனைத்து உயிரினமும் நினைத்துக் கொண்டிருக்கிறது அதாவது "நான்தான் பகவான் மேலும் நான்தான் இந்த ஜட உலகின் படைப்பாளர்." இந்த உணர்வுக்கு இரண்டு உளவியல் சார்ந்த அசைவு அல்லது இரண்டு உளவியல் சார்ந்த பகுதி இருக்கிறது. ஒன்று என்னவென்றால் "நான்தான் படைப்பாளர்," மேலும் மற்றொன்று "நான்தான் அனுபவிப்பாளர்." உண்மையிலேயே முழுமுதற் கடவுள்தான் படைப்பாளர், மேலும் உண்மையிலேயே அவர்தான் அனுபவிப்பாளர். மேலும் உயிர்வாழிகள், முழுமுதற் கடவுளின் அங்க உறுப்புகளாக இருப்பவர்கள், அவர் உண்மையிலேயே படைப்பாளரோ அல்லது அனுபவிப்பவரோ அல்ல, ஆனால் அவர் ஒத்துழைப்பவர். எவ்வாறு என்றால் முழு இயந்திரத்தைப் போல். இயந்திரத்தின் பாகங்கள் ஒத்துழைப்பவை, ஒத்துழைப்பவை. அல்லது நம்மால் சும்மா நம் உடலின் அடிப்படை அமைப்பை கற்க இயன்றால். இப்பொழுது, இந்த உடம்பில் கைகள், கால்கள், கண்கள் அங்கே இருக்கின்றன, மேலும் இந்த இயந்திரங்கள் அனைத்தும், வேலை செய்கின்றன, ஆனால் உடலின் இந்த அங்க உறுப்புகள், அவைகள் அனுபவிப்பாளார் அல்ல. இந்த வயிறுதான் அனுபவிப்பாளார். இந்த கால்கள் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கிறது. கைகள் சேகரிக்கின்றது, கைகள் உணவுப் பொருள்களை தயாரித்துக் கொண்டிருக்கிறது, அத்துடன் பற்கள் மெல்லுகின்றன, மேலும் அனைத்தும், உடம்பின் அனைத்து பாகங்களும், வயிற்றை திருப்திபடுத்துவதில் ஈடுபட்டிருக்கிறது. ஏனென்றால் வயிறு, உடல் என்னும் நிறுவனத்தினுல், இயற்கை நிகழ்சிகளால் கொண்டு பெறப்பட்ட விதி. மேலும் அனைத்தும் வயிற்றுக்கு கொடுக்கப்பட வேண்டும். ப்ராணோபஹாராச் ச யதேந்த்ரியாணாம் (ஸ்ரீ.பா.4.31.14). எவ்வாறு என்றால் ஒரு மரத்தை அதன் வேரில் நீர் ஊற்றுவதன் மூலம் செழிப்பாக பச்சையாக இருப்பதை காணலாம். அல்லது நீங்கள் ஆரோக்கியமாகலாம், உடலின் பாகங்கள் — கைகள், கால்கள், கண்கள், காதுகள், விரல்கள் — அனைத்தும் ஆரோக்கியமான நிலையில் இருக்கும், எப்பொழுது என்றால் உடலின் பாகங்கள் வயிறுடன் ஒத்துழைக்கும் பொழுது. அதேபோல், நித்தியமான உயிரினம், பகவான், அவர்தான் அனுபவிப்பாளர். அவர்தான் அனுபவிப்பாளர் மேலும் அவர்தான் படைப்பாளர். மேலும் நாம், நான் சொல்வது யாதெனில், பிரதானமற்ற உயிரினம், முழுமுதற் கடவுளின் சக்தியினால் உருவாக்கப்பட்டவர்கள், நாம் சும்மா அவருடன் ஒத்துழைக்க வேண்டும். அந்த ஒத்துழைப்பு உதவி அளிக்கும். சும்மா உதாரணத்திற்கு, ஒரு நல்ல உணவு பண்டம் விரல்களால் எடுக்கப்பட்டது. விரல்கள் இவ்வாறு நினைத்தால் அதாவது "நான் என் இதை வயிற்றுக்கு கொடுக்க வேண்டும்? நாமே அனுபவிப்போம்." அது தவறானது. விரல்களால் அனுபவிக்க முடியாது. விரல்களுக்கு அந்த குறிப்பிட்ட உணவு வகையை அனுபவிக்கும் பலன் வேண்டுமென்றால், விரல்கள் அதை வயிற்றுக்கு கொடுக்க வேண்டும்.