"நோயுற்ற நிலையில் நாம் உணவை ரசித்து உட்கொள்ள இயலாது. ஆரோக்கியமாக இருக்கும் நிலையில் சுவைத்து உண்ணலாம். எனவே குணமடைய வேண்டும். எவ்வாறு குணமடைவது? கிருஷ்ண பக்தியின் திவ்வியமான நிலையை அடைவதின் மூலம் குணமடைய வேண்டும். புலன்களின் இன்ப இச்சையை கட்டுப்படுத்தக் கூடியவர்கள் என்று கிருஷ்ணர் பரிந்துரைக்கிரார். இந்த உடல் இருக்கும்வரை அந்த ஆசை இருக்கும், எனவே அதை தாங்கிக் கொள்ளும் வகையில் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். தாங்கிக் கொள்ளுதல். இது ஆன்மீக வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொடுக்கும், மேலும் ஆன்மீக வாழ்க்கையை அடைந்தவுடன், முடிவில்லா, கரையில்லா இன்பம் கிடைக்கும். அதற்கு முடிவில்லை."
|