"முழுமுதற்கடவுள் நாம் பார்க்கும் எதன் மூலமும், பௌதிகமோ ஆன்மீகமோ, இயற்பியல், இரசாயனம் தொடர்பான எதுவும், பெயர் சொல்லக்கூடிய எதுவும், நிறைய உள்ளன, இவ்வாறாக அனைத்தின் மூலமும் பிரதிநிதி க்கப்படுகிறார். அவை கடவுளிடமிருந்து வேறுபட்டவையல்ல. கடவுள் எல்லா இடங்களுக்கும் தொடர்புடையவர். ஈஷா₂வாஸ்யம் இத₃ம் ஸர்வம் (ISO 1). நாம் பகவத்கீதையில் படிக்க ஆரம்பித்துள்ளது போல், யேன ஸர்வம் இத₃ம் ததம்: 'உடல் முழுவதும் பரவியுள்ள விடயம் தான் நீ'. இது தனிப்பட்ட உணர்வு: 'நான் என் உடல் முழுவதும் பரவியுள்ளேன்'. இதேபோல் பரம உணர்வும் பிரபஞ்சம் முழுவதும் பரவியுள்ளார். இது கடவுளின் சக்தியின் மிகச்சிறியதொரு வெளிப்பாடு."
|