"இப்போது, இதுவரை கடவுளிடம் வராத நான்கு வகை மனிதர்கள்... அதாவது பக்தி அற்றவர்கள், மூடர்கள், மனிதரில் கடைநிலையோர், மாயையால் அறிவு கவரப்பட்டவர்கள் மற்றும் நாத்திகர்கள். இந்த வகையினர்களைத் தவிர, கடவுளிடம் வரும் நான்கு வகை மனிதர்கள், ஆர்த: துயருற்றவன், கேள்வியுடையவன், அர்த-அர்தீ என்றால் ஜட இலாபங்களை விரும்புபவன் மற்றும் க்ஞானீ என்றால் பூரணத்தின் அறிவைத் தேடுவோர். இப்போது, இந்த நான்கு வகையினர்களில், பகவான் கிருஷ்ணர் கூறுகிறார், தேஷாம் க்ஞானீ நித்ய-யுக்த ஏக-பக்திர் விஷிஷ்யதே: 'இவர்களில், முழு ஞானத்துடன் எப்போதும் தூய பக்தித் தொண்டில் ஈடுபட்டிருப்பவன், அவன் விஷிஷ்யதே.' விஷிஷ்யதே என்றால் சிறப்புத் தகுதி உடையவன்."
|