"நாம் நித்தியமாக கிருஷ்ணருடன் தொடர்பு கொண்டுள்ளோம் என்பதுதான் புரிந்துணர்வு. இதை மறந்துவிட்டதால், தற்சமயம், இது நான்னில்லை என்னும் பௌதிக உடலுடன் தொடர்பு வைத்துள்ளோம். ஆகையினால் கிருஷ்ணருடன் நேரடியாக தொடர்புள்ள எனது செயல்களை புதிப்பிக்க வெண்டும். அதுதான் கிருஷ்ண உணர்வில் செயல்படுதல் என்று கூறப்படுகிறது. மெலும் கிருஷ்ண உணர்வில் முன்னேறுவதால் கிருஷ்ணர் மீதான அன்பு அதிகரிக்கும். அந்த நிலை அடையும் போது, பகவான் மீது அன்பு, கிருஷ்ணர் மீது அன்பு, பிறகு நாம் எல்லோரையும் நேசிப்போம், எனென்றால் கிருஷ்ணர் ஒவ்வோறுவரிடமும் இருக்கிறார். அந்த மையத்திற்கு வராமல், பௌதிக வாழ்க்கையில் நாம் வைத்திருக்கும் அன்பு - சமத்துவம், சங்கம், சகோதரதன்மை - அவை அனைத்தும் ஏமாற்று செயல். அது சாத்தியமில்லை."
|