"பக்தி சேவையின் மூலம் 'எனது துன்பகரமான பௌதிக நிலை மாறிவிடும் 'என்றோ 'இந்த பௌதிக தளையிலிருந்து முக்தி பெறுவேன்' என்றோ ஒருவர் எதிர்பார்க்கக் கூடாது. இதுவும் ஒரு வகை புலனுகர்வே. 'இந்த தளையிலிருந்து விடுபடுவோம்...' என்று யோகிகளும் ஞானிகளும் முயற்சிக்கிறார்கள். அவர்கள் இந்த பௌதிக தளையிலிருந்து விடுதலை பெற முயற்சிக்கிறார்கள். ஆனால் பக்தி சேவையில் இப்படிப்பட்ட ஆசை கிடையாது, ஏனென்றால் இது தூய அன்பு. 'நான் இந்த வகையில் நன்மைப் பெறுவேன்' என்ற எதிர்பார்ப்பெல்லாம் இல்லை. 'எனக்கு கைமாறாக ஏதும் கிடைக்காவிட்டால் கிருஷ்ண உணர்வில் பக்தி சேவையை நான் பயிலமாட்டேன்' என்பது போன்று இலாப நோக்குடைய வியாபாரமல்ல இது. இலாபம் என்ற கேள்விக்கே இடமில்லை."
|