"பகவத்கீதையில் (BG 9.4) மயா ததம் இத₃ம் ஸர்வம் ஜக₃த்₃ அவ்யக்த-மூர்தினா: "நான் அகிலம் முழுவதும், படைப்பு முழுவதும் எனது அருவ அம்சத்தின் மூலம் பரவியுள்ளேன்" என்று பகவான் கூறுகிறார். மத்-ஸ்தா₂னி ஸர்வ-பூ₄தானி நாஹம் தேஷு அவஸ்தி₂த꞉: எல்லாம் என்னுள் இருக்கின்றன, ஆனால் நான் அங்கு இல்லை." பஷ்₂ய மே யோக₃ம் ஐஷ்₂வரம் (BG 9.5). எனவே இந்த ஒரே சமயத்தில் ஒன்றாகவும் வேறாகவும் இருக்கிறது என்ற தத்துவம் பகவான் சைதன்யரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அது பகவத் கீதையிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது; மத்த꞉ பரதரம் நான்யத் கிஞ்சித்₃ அஸ்தி த₄னஞ்ஜய (BG 7.7). இரு கரங்களுடன் புல்லாங்குழலுடன் காணப்படும் கிருஷ்ணரின் இந்த ரூபத்திலும் உயர்ந்தது எதுவுமில்லை. எனவே ஒருவர் இந்த கருத்தின் தளத்திற்கு வரவேண்டும்."
|