"ஸ்ரீமத் பாகவதத்தில் பன்னிரண்டு காண்டங்கள் உள்ளன. பத்தாவது காண்டத்தில் கிருஷ்ணரின் அவதாரம் மற்றும் அவரது செயல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கிருஷ்ணரின் செயல்கள் மற்றும் அவரது வாழ்க்கை குறிப்பிடப்பட முன் ஒன்பது காண்டங்கள் உள்ளன. ஏன்? த₃ஷ₂மே த₃ஷ₂மம் லக்ஷ்யம் ஆஷ்₂ரிதாஷ்₂ரய-விக்₃ரஹம். கிருஷ்ணரை புரிந்துகொள்வதற்கு, இந்த படைப்பு என்பது என்ன, அது எவ்வாறு இயங்குகிறது, அதன் செயற்பாடுகள் என்ன, ஆன்மீக அறிவு என்றால் என்ன, தத்துவம் என்றால் என்ன, துறவு என்றால் என்ன, முக்தி என்றால் என்ன, என்பதையெல்லாம் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவை அனைத்து விஷயங்களையும் நாம் நன்றாக கற்றுக் கொள்ள வேண்டும். இவற்றை பூரணமாகக் கற்றுக் கொண்டபின் கிருஷ்ணரை புரிந்துகொள்ளலாம்."
|