"நாம் எல்லோரும் அதிகாரம் செலுத்த முயற்சி செய்கிறோம். எல்லோரும் முயற்சி செய்கிறார்கள். பொக்டா. "நான் செய்வேன்..." போட்டி நடந்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் ஆயிரம் தொழிலாளர் அல்லது எழுத்தருக்கு அதிகாரி என்று வைத்துக் கொள்வோம். உங்கள் அலுவலகம் மிகவும் பெரியது. எனவே நான் என் அலுவலகத்தை உன்னைவிட பெரிதாக்க விரும்புகிறேன். இதுதான் நம் போட்டி, நடந்துக் கொண்டிருக்கிறது. ஆனால் நாம் யாரும் உண்மையில் அதிகாரி இல்லை. நாம் அனைவரும் அடக்கப்படுகிறோம். நாம் இதை அறியாததால் அதாவது "நான் அதிகாரியாக முடியாது," ஆகையினால் நான் மாயையின் கீழ் இருக்கிறேன். உண்மையான அதிகாரி முழுமுதற் கடவுள், கிருஷ்ணர்."
|