"கிருஷ்ணருடன் நட்புறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு பெரிய மனிதரை பார்க்க செல்ல வேண்டுமெனில், எப்படியோ அவருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களை நட்பான வழியில் அன்புடன் அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும். பின்னர் பெரிய மனிதர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது சாத்தியமாகிறது. பரலோகமாகிய கிருஷ்ண லோகத்திற்குச் செல்ல வேண்டுமெனில், கிருஷ்ணர் மீது அன்பு செலுத்துவது எப்படி என்று நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். கடவுளுடன் அன்பு மூலம் நெருக்கமாக உறவு கொண்டிருந்தால்... அவரை நம்மால் கைப்பற்றி விட முடியாது... அன்புடன் இல்லாவிட்டால் பரமனிடமிருந்து எந்த உதவியையும் பெற முடியாது."
|