"தனது ஸ்வயம்-ரூபத்தில், சொந்த உருவத்தில், அவர் எப்போதும் ஒரு இடையச் சிறுவனாக விருந்தாவனத்திலேயே தங்கியிருக்கிறார். இதுவே கிருஷ்ணரது உண்மையான உருவம். குருக்ஷேத்திரப் போர்க்களத்திலிருந்த கிருஷ்ணர் தனது உண்மையான உருவத்தில் இருக்கவில்லை. உயர்நீதிமன்ற நீதிபதியைப் போல், அவரது உண்மையான உருவத்தை எங்கு காண்பீர்கள்? அவரது வீட்டில் அவரது உண்மையான உருவத்தை காண்பீர்கள், நீதிமன்றத்தில் அல்ல. நீதிமன்றத்தில் நீதிபதியின் தந்தை வந்தாலும் நீதிபதியை 'பிரபுவே' என்றுதான் அழைக்க வேண்டியிருக்கும். அதுவே நீதிமன்றம். ஒரே நபராக இருந்தாலும் வீட்டில் இருப்பதற்கும் நீதிமன்றத்தில் இருப்பதற்கும் வித்தியாசம் உண்டு. இதேபோல் உண்மையான பரமபுருஷ பகவான் கிருஷ்ணர் பிருந்தாவனத்தை விட்டு எப்போதும் அகல்வதில்லை. அவர் எப்போதும் ஒரு இடையச் சிறுவனாக இருக்கிறார்."
|