"ஒரு வேளை என் வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்து எனக்கு சில கெட்ட குணங்கள் இருந்து, ஆனால் "கிருஷ்ண உணர்வு மிகவும் அருமையானது. நான் அதை மேற்கொள்ள வேண்டும்." என்று புரிந்துக் கொண்டு, நான் இயன்றவரை முயற்சி செய்கிறேன். அதே சமயத்தில், சில பழகிப்போன விஷயங்களை என்னால் தவிர்க்க முடியவில்ல. என்னுடைய இந்த பழக்கம் நல்லதல்ல என்று தெரிந்தும், அதுவே என் இயற்கை குணம். தவிர்க்க முடியாது. ஆகவே பகவான் கிருஷ்ணர் பரிந்துரைக்கிறார் ஆதாவது "இருப்பினும், அவன் நல்லவன். அவன் சாதுவல்ல, அல்லது நேர்மையற்றவன், அல்லது பக்திமானல்ல, என்னும் கேள்விக்கே இடமில்லை. அவன் கிருஷ்ண பக்தியுள்ளவன் என்னும் தகுதி ஒன்றும், நேர்மையுடன் செயல்புரிகிறான், ஆனால் சில சமயங்களில் தவறுகிறான், இருப்பினும், அவன் சாதுவாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்." சாதுவென்றால் நேர்மை, சமயத்தில் ஈடுபாடுள்ளவன், பக்திமான்."
|