TA/661221 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"கிருஷ்ண உணர்வு மாயையான பௌதிக இயற்கையுடனான ஒரு விதமான போர் பிரகடனமாகும் என்பதை எப்பொதும் நினைவில் கொள்ளுங்கள். ஆகவே அங்கே போர் இருக்கிறது. அவள் உங்களை எப்போதும் கவிழ்க்க முயற்சி செய்வாள். தைவீ ஹ்ய் ஏஷா குண-மயீ மம மாயா துரத்யயா (ப.கீ. 7.14). அது பலமிக்கது, சக்தி வாய்ந்தது. உங்களை எவ்வாறு காப்பாற்றிக் கொள்வீர்கள்? மாம் ஏவ யே ப்ரபத்யந்தே மாயாம் ஏதாம்ʼ தரந்தி தே. நீங்கள் வெறுமனே உறுதியுடன் கிருஷ்ண பக்தி தொண்டில் ஈடுபட்டால், உங்களை இழுத்துச் செல்ல மாயையான இயற்கைக்கு சக்தி இருக்காது." |
661221 - சொற்பொழிவு CC Madhya 20.313-317 - நியூயார்க் |