"ஆன்மீகக் கண்ணோட்டத்தில் இந்த கலியுகத்தைச் சேர்ந்த மக்கள் துரதிர்ஷ்டசாலிகள். ஸ்ரீமத் பாகவதத்தின் இரண்டாவது அத்தியாயம், முதல் காண்டத்தில் அவர்கள் பற்றிய விவரணம் கொடுக்கப்பட்டுள்ளது (SB 1.2), அவர்கள் குறுகிய ஆயுள் கொண்டவர்கள், ஆன்மீக தன்னுணர்வில் மந்தமானவர்கள். மனிதப் பிறவி விசேஷமாக ஆன்மீக தன்னுணர்வுக்காகவே உள்ளது, ஆனால் அவர்கள் வாழ்வின் இலட்சியத்தை மறந்துவிட்டனர். உடலின் தேவைகளை பூர்த்தி செய்வதிலேயே மிகவும் தீவிரமாக உள்ளனர். அப்படியே யாராவது ஆன்மீக தன்னுணர்வில் ஆர்வம் கொண்டிருந்தாலும் அவர்களும் பிழையாக வழிகாட்டப்படுகின்றனர்."
|