"ஒரு குழந்தையைப் போல, ஒரு குழந்தை மோட்டார் கார் வீதியில் செல்வதை பார்க்கும் போது அந்த மோட்டார் கார் தானாக ஓடுவதாக நினைக்கிறது. இது புத்திசாலித்தனமன்று. மோட்டார் கார் ஓடுகிறது... எப்படி என்றால், இங்கு எம்மிடம் ஒரு டேப் ரெக்கார்டர் (ஒலிப்பதிவு பெட்டி), மைக்ரோபோன் (ஒலிவாங்கி) உண்டு. சிலர் கூறலாம், "ஓ, இந்த கண்டுபிடிப்புகள் எவ்வளவு அருமையாக உள்ளன. அவை நன்றாக செய்யப்படுகின்றனவே." ஆனால் இந்த மைக்ரோபோன் ஆன்மாவின் தொடுகையின்றி ஒரு கணமேனும் செயற்பட முடியாதென்பதை ஒருவன் பார்க்க வேண்டும். அதுவே புத்திசாலித்தனம். ஒரு இயந்திரத்தை பார்த்தவுடன் அதிசயித்து போகக்கூடாது. அந்த இயந்திரத்தை இயக்குபவர் யார் என்பதை கண்டுபிடிக்க முயலவேண்டும். அதுவே புத்திசாலித்தனம், ஸுகார்த-விவேசனம், நுணுக்கமாக பார்த்தல்."
|