"இப்படிப்பட்ட புத்திசாலித்தனம் எங்குமில்லை, இப்படிப்பட்ட அறிவு எங்குமில்லை, அவர்கள் மிகவும் கர்வம் கொள்கிறார்கள். எமக்கும் உண்மையில் வேண்டுமெனில்... ஏனென்றால் அறிவு போன்றவை கடவுளின் பரிசுகள்... இது இங்கு விவரிக்கப்பட்டுள்ளது, புத்திர் ஜ்ஞானம் அஸம்மோஹ꞉ (BG 10.4). இவை அனைத்தும் கடவுளின் பரிசுகள். நாம் அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த மனித வடிவம் கடவுளின் பரிசுகளை பயன்படுத்திக் கொள்வதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. கடவுள் நமக்கு அருமையான உணவுப்பண்டங்களை கொடுத்துள்ளார்; புத்தியை கொடுத்துள்ளார்; அறிவை கொடுத்துள்ளார்; இப்போது அறிவுசார் புத்தகங்களை கொடுத்துள்ளார். பகவத்கீதையில் அவர் தானே பேசுகிறார். அதை ஏன் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது? அதை ஏன் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது? நாம் அதை பயன்படுத்திக் கொண்டால், ஒரு ஆரியனாக அல்லது மனிதனாக பெருமைப்பட்டுக் கொள்ளலாம்."
|