" எனவே அந்த முழு முதற் கடவுளுடன் நாம் உறவு கொள்ள போகிறோம். பிறகு அதை எவ்வாறு செய்து முடிப்பது? அது சைதன்ய மஹாபிரபு மூலம் விவரிக்கப்படுகிறது, மேலும் அது இவ்வாறு கூறப்படுகிறது - அந்த இலக்கை அடையக் கூடிய தொண்டை நிறைவேற்றும் செயல்முறை - இது ஆபிதேய என்று கூறப்படுகிறது. ஆபிதேய என்றால் வேலைகளை நிறைவேற்றுவது, வேலைகளை நிறைவேற்றுவது, அல்லது கடமைகளை நிறைவேற்றுவது - வேலை அல்ல: கடமை. வேலையை சில நேரங்களில் நீங்கள் தவிர்க்கலாம் , மேலும் நீங்கள் மன்னிக்கப்படுவீர்கள், ஆனால் கடமை அவ்வாறு முடியாது. கடமை என்றால் நீங்கள் செய்ய வேண்டும். எனென்றால் நீங்கள் கடமைபட்டிருக்கிறீர்கள், செய்யாவிட்டால் துன்பத்திற்கு ஆளாவீர்கள்."
|