"சிலர் வாதிடலாம், கிருஷ்ணரின் சேவையில் முழுமையாக ஈடுபட்டால், பிறகு என்ன செய்வது? எப்படி இந்த பௌதிக உலகில் வாழ்வது? எனது பராமரிப்பை கவனித்துக் கொள்வது யார்?" இது நமது முட்டாள்தனம். ஒரு சாதாரண நபருக்கு சேவை செய்தால்கூட உங்களது பராமரிப்புக்கு தேவையானதை பெறுகிறீர்கள்; உங்களது சம்பளத்தை டாலர்களில் பெறுகிறீர்கள். இது பெரும் முட்டாள்தனம், கிருஷ்ணருக்கு சேவை செய்யப் போகிறீர்கள் அப்படியிருக்கையில் அவர் உங்களை பராமரிக்கமாட்டாரா? யோக-க்ஷேமம் வஹாம்-யஹம் (BG 9.22). கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறுகிறார், "அவனது பராமரிப்பை நானே பொறுப்பேற்கிறேன்." ஏன் அதை நம்புவதில்லை? பிரத்தியட்சமாக உங்களால் அதை காண முடியும்."
|