"கிருஷ்ண ஞானம் இல்லாமல் நம்மால் ஆனந்தமாக இருக்க முடியாது. ஆனால் இயற்கையாகவே நாம் ஆனந்தமயமானவர்கள். பிரம்ம சூத்திரத்தில், வேதாந்த சூத்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது, ஆனந்தமயோ அப்யாஸாத். எல்லா உயிர்வாழிகளும், பிரம்மன். உயிர்வாழிகள் பிரம்மன் என்பதோடு கிருஷ்ணர் பரப்பிரம்மனாவார். பிரம்மன் மற்றும் பரப்பிரம்மன் ஆகிய இருவரும் இயற்கையாகவே ஆனந்தமயமானவர்கள். அவர்கள் அனுபவிக்க விரும்புகின்றனர். எனவே நமது ஆனந்தம், கிருஷ்ணருடன் கொள்ளும் தொடர்பில்தான் உண்டு. நெருப்பும் தீப்பொறியும் போன்றது. நெருப்புடன் தீப்பொறி சேர்ந்திருக்கும் வரை, அது அழகாக இருக்கும். தீப்பொறி நெருப்பிலிருந்து விழுந்தவுடன் உடனே அனைந்து போகிறது, இனிமேல், அழகாக இருக்கப் போவதில்லை."
|