TA/670109 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"நித்தியமாக முக்தியடைந்த ஆத்மாக்கள் கிருஷ்ணரை நேசிப்பதால் மட்டுமே திருப்தியடைகிறார்கள். அதுவே அவர்களது திருப்தி. எல்லோருக்கும் அன்பு செலுத்த விருப்பம். அது எல்லோருக்கும்
இருக்கும் இயல்பான நாட்டம். அன்பு செலுத்த எதுவும் இல்லையென்றால், இந்த பௌதிக உலகில் சில சமயங்களில் நாய்களையும் பூனைகளையும் நேசிக்கிறோம். ஏனென்றால் யாரையாவது நேசித்தாக வேண்டும். அன்பு செலுத்த பொருத்தமான நபர் கிடைக்காவிட்டால், பின்னர் அன்பை ஏதாவது பொழுதுபோக்கு மீதோ, சில விலங்குகள் மீதோ திசை திரும்புகிறோம், ஏனென்றால் அன்பு அங்கு இருக்கிறது. அது உறங்கிக் கிடக்கிறது. கிருஷ்ணர் மீதான எமது பிரேமை உறங்கிக் கிடக்கிறது. அது நம்முள்தான் இருக்கிறது. ஆனால் கிருஷ்ணர் பற்றிய தகவல் இல்லாததால், ஏமாற்றமளிக்கும் ஏதோ ஒன்றின் மீது எமது அன்பை செலுத்துகிறோம். அது அன்பிற்குரியதல்ல. எனவேதான் நாம் ஏமாற்றமடைகிறோம்." |
670109 - சொற்பொழிவு CC Madhya 22.11-15 - நியூயார்க் |