"கிருஷ்ணரே மூல சூரியன் ஆவார்; எனவே கிருஷ்ணர் எங்கெல்லாம் உள்ளாரோ அங்கெல்லாம் அறியாமை அல்லது மாயை இருக்க முடியாது. இருளானது அறியாமை, மாயை, உறக்கம், சோம்பேறித்தனம், மது, பித்து என்பவற்றோடு ஒப்பிடப்படுகிறது; இவை அனைத்தும் இருள். இருளின் குணத்தில் இருப்பவரிடம் இவை வெளிப்படும்: அதிகப்படியான உறக்கம், சோம்பேறித்தனம், அறியாமை. அறிவுக்கு நேர் எதிரான தன்மை. எனவே இவை இருள் எனப்படுகின்றன. ஒருவர் உண்மையிலேயே கிருஷ்ண உணர்வில் இருந்தால், இந்த குணங்கள் அவரிடம் இருக்க முடியாது. இதுவே கிருஷ்ண உணர்வின் முன்னேற்றத்திற்கான பரிட்சை."
|