"பகவான் சைதன்ய மகாபிரபுவின் சிறப்பு என்னவெனில், அவர் மிகச் சிறந்த வாதங்களை முன்வைத்து, அவரது பிரதிவாதிகள் திருப்தியடையும் வகையில் தோற்கடிப்பார். அவர்கள் எதிரிகள் அல்ல. சாஸ்திர பிரமாணங்களை கொண்டு, விதண்டாவாதம் அல்ல. சாஸ்திர பிரமாணங்களை கொண்டு, நியாமான வாதங்களை முன்வைத்தார். ஸர்வ-ஷாஸ்த்ர கண்டி(அ) ப்ரபு பக்தி கரே ஸார. இதில் உள்ள அழகு என்னவெனில் பக்தி சேவைக்கு எதிரான ஏனைய எல்லா வாதங்களையும் அவர் முறியடித்தார். 'கடவுள் பெரியவர், நாம் அவருக்கு சேவை செய்யவே உள்ளோம்' என்பதையே அவர் நிறுவிக் கொண்டிருந்தார்."
|