TA/670205 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கருமி என்பவர் புலனின்பத்திற்காக இரவு பகலாக கடினமாக உழைப்பவர். அவ்வளவுதான். அவர்களே கருமிகள் எனப்படுவர். ஞானி என்பவர் மன கற்பனை மூலம் தீர்வு காண முயல்பவர். யோகி என்பவர் உடற்பயிற்சிகள் மூலம் முக்தியடைய முயல்பவர். அவர்கள் அனைவரும், கண்டிப்பான அர்த்தத்தில், பௌதிகவாதிகளே. ஆன்மீகம் என்ற கேள்விக்கே இடமில்லை. ஆன்மீகம், ஒருவர் ஆத்மாவின் உண்மையான நிலையை புரிந்து கொண்டு அதற்கேற்ப நடக்கும் இடத்தில் தான் உண்டு. எனவே பக்தி, பக்தி சேவை மட்டுமே ஆன்மீகம். ஏனென்றால் பக்தர்கள் தாங்கள் முழுமுதற் கடவுளின் பின்ன பகுதிகள் என்பதை அறிவார்கள், அதன் காரணமாக முழுமுதற் கடவுளின் திவ்யமான அன்புத் தொண்டில் ஈடுபட்டிருப்பதே ஆன்மீகமாகும்."
670205 - சொற்பொழிவு CC Adi 07.39-47 - சான் பிரான்சிஸ்கோ