"ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மகாபிரபு தனது ஹரே கிருஷ்ண உச்சாடனத்தின் பிரத்தியட்சமான அனுபவத்தை விவரிக்கிறார். அவர் "நான் கிட்டத்தட்ட பித்தனாக மாறுகிறேன்" என்று உணர்ந்த போது, தனது ஆன்மீக குருவை அணுகி, "எனதன்பு பிரபுவே, எனக்கென்றால் தெரியவில்லை, என்ன வகையான உச்சாடனத்தை எனக்கு செய்ய சொன்னீர்கள் என்று" எனத் தெரிவித்தார். ஏனென்றால் அவர் தன்னை எப்போதும் ஒரு முட்டாளாகவும், என்ன நடக்கின்றது என்று புரிந்து கொள்ள முடியாதவராகவும் தன்னை பாவித்துக் கொண்டார். அவர் கூறினார் "இவைதான் எனக்கு ஏற்பட்ட அறிகுறிகள்: சில வேளைகளில் நான் அழுகிறேன், சிலவேளைகளில் நான் சிரிக்கிறேன். சிலவேளைகளில் நான் நடனம் ஆடுகிறேன். எனவே நான் நினைக்கிறேன் நான் பித்தனாகிவிட்டேன் என்று."
|