TA/670217 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஆகவே பகவானின் படைப்பில் குறையே இல்லை. இதை முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும். எனவே சைதன்ய மஹாபிரபு கூறுகிறார் அதாவது வேதாந்த, வேதாந்தத்தை பகவான் தானே தொகுத்தார். இது நேற்று விவரிக்கப்பட்டது. பகவான் கிருஷ்ணர் மேலும் கூறுகிறார் அதாவது வேதாந்த வித் வேதாந்த க்ருʼத் ச அஹம் (ப.கீ. 15.15): "நானே வேதாந்ததின் தொகுப்பாளன், நானே வேதாந்தத்தை அறிந்தவன்." "பகவான், கிருஷ்ணர், வேதாந்தத்தை அறியாதவர் என்றால், அவரால் எவ்வாறு தொகுக்க முடியும்? வேதாந்தம் என்றால் "அறிவில் கடைசி வார்த்தை." நாம் அனைவரும் அறிவை தேடிச் செல்கிறோம், மேலும் வேதாந்தம் என்றால் அறிவில் கடைசி வார்த்தை. எனவே சைதன்ய மஹாபிரபு முதலில் நிலைநாட்டினார் அதாவது வேதாந்த-சூத்ராவில் உங்களால் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாது; ஆகையினால் அதை மாற்ற உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. ஏனென்றால் நீங்கள் வெற்றுரை முட்டாள், ஆகையால், குறையற்ற நித்திய பகவானால் தொகுக்கபட்ட சூத்ராவில் நீங்கள் எப்படி அனுகி கருத்து தெரிவிக்க முடியும்? ஆனால் "நான் போக்கிரி" என்று நாம் ஒப்புக் கொள்ளமாட்டோம். நான் மிகவும் கற்றறிந்தவன், நான் குறையற்றவன், என்று நான் நினைக்கிறேன்." ஆக இது முட்டாள்தனம்."
670217 - சொற்பொழிவு CC Adi 07.106-107 - சான் பிரான்சிஸ்கோ