"சில கருத்துக்களை நாமே உருவாக்கிக் கொண்டு, நாம் கிருஷ்ண உணர்வினர் என்று விளம்பரப்படுத்திக் கொள்வது போன்றதொரு செயற்கையான விடயமன்று இந்த கிருஷ்ண உணர்வு. இல்லை, கிருஷ்ண உணர்வு என்றால் கீழ்படிவான குடிமகன் அரசின் மேலாதிக்கத்தை பற்றி எப்போதும் உணர்ந்து இருப்பதுபோல், கடவுள் அல்லது கிருஷ்ணரின் மேலாதிக்கத்தை பற்றி எப்போதும் உணர்ந்திருப்பவன் கிருஷ்ண உணர்வினன் எனப்படுவான். "நாம் ஏன் கிருஷ்ண உணர்வினராக வேண்டும்?" என்று கேட்டால், கிருஷ்ண உணர்வினராக ஆகவில்லை என்றால், குற்றவாளியாக, பாவியாக ஆகிவிடுவோம். துன்பப்பட வேண்டி வரும். இயற்கையின் சட்டங்கள் மிகக் கடுமையானவை, துன்பத்தை அளிக்காமல் விட்டுவிடாது."
|