TA/670218 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பிரம்மன் என்றால் "மிகப் பெரியவர்." மிகப் பெரியவர் என்பதன் கருத்து என்ன? மிகப் பெரியவர் என்றால்... அது பராசர சூத்திரத்தில் விவரிக்கப்பட்டுள்ளது, அதாவது அவர்தான் செல்வத்தில் மிகப் பெரியவர், புகழில் மிகப் பெரியவர், அறிவில் மிகப் பெரியவர், துறவில் மிகப் பெரியவர், அழகில் மிகப் பெரியவர், கவர்ச்சிமிகு எதுவாயினும். "மிகப் பெரியவர்" என்பதை எப்படி புரிந்து கொள்வது? "மிகப் பெரியவர்" என்பது ஆகாயம் மிகப்பெரியது என்பதை போன்றதன்று. அது அருவவாதம். ஆனால் எமது "மிகப் பெரியவர்" எனும் கருத்து, கோடிக்கணக்கான ஆகாயங்களை தன்னுள் அடக்கக்கூடிய மிகப் பெரியவர். பௌதிக கருத்தின்படி மேலும் செல்ல முடியாது. மிகப் பெரியவர் என்றதும் ஆகாயத்தை மட்டுமே அவர்களால் நினைக்க முடியும். அவ்வளவுதான்."
670218 - சொற்பொழிவு CC Adi 07.108 - சான் பிரான்சிஸ்கோ