"நீங்கள் என்னுடைய புகைப்படத்தை என் ஆசனத்தில் வைத்தால், மேலும் நான் இங்கு இல்லாத நேரத்தில், அந்த புகைப்படம் செயலாற்றாது, ஏனென்றால் அது பௌதிகம். ஆனால் கிருஷ்ணருக்கு, அவருடைய புகைப்படம், சிலை, அவருடைய அனைத்தும் செயலாற்றும் ஏனென்றால் அவர் ஆன்மீகவாதி. ஆகவே நாம் எப்போதும் தெரிந்துக் கொள்ள வேண்டும், அதாவது நாம் ஹரே கிருஷ்ண என்று உச்சாடனம் செய்தவுடனே கிருஷ்ணர் அங்கிருப்பார். உடனடியாக கிருஷ்ணர் அங்கிருக்கிறார். ஆனால் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டியது யாதெனில், சத்தத்தின் அதிர்வுகளால் கிருஷ்ணர் அங்கிருக்கிறார். எனவே அங்கானி யஸ்ய. ச ஈக்ஷாஞ்சக்ரே. ஆகவே அவருடைய பார்வை, தோற்றம், செயல்கள், அவை அனைத்தும் ஆன்மீகம். பகவதி கீதையில் அது சொல்லப்பட்டுள்ளது, ஜன்ம கர்ம மே திவ்யம்ʼ யோ ஜானாதி தத்த்வத꞉ (ப.கீ. 4.9): "என்னுடைய பிறப்பின் உன்னதமான நிலை, தோற்றம், மறைவு மேலும் செயல்களை புரிந்துக் கொண்ட எவரும்," த்யக்த்வா தேஹம்ʼ புனர் ஜன்ம நைதி, "அவர் உடனடியாக முக்தி அடைவார்."
|