TA/670303 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பாகவத-தர்ம என்றால் முழுமுதற் கடவுளுடன் உறவு. பலவிதமான உறவுகள் உள்ளன. எனவே நம் உறவு முழுமுதற் கடவுளுடன் என்றால், அது பாகவத-தர்ம என்று கூறப்படுகிறது. பாகவத, பகவான் என்ற சொல்லில் இருந்து வந்தது. பகவான் என்றால் ஆறு வகை செழுமைகளையும் நிறைவாக பெற்றவர். அவர் பகவான்அல்லது கடவுள் ஆவார். உலகின் பல வேத நூல்களில் கடவுளைப் பற்றிய கற்பனை உள்ளது, ஆனால் உண்மையில் பகவானைப் பற்றிய விளக்கம் இல்லை. ஆனால் ஸ்ரீமத் பாகவதத்தில், அது இறை விஞ்ஞானம் என்பதால், விளக்கம் உள்ளது, பகவான் என்றால் என்ன என்ற விளக்கம் இருக்கிறது. அதன் விளக்கம் என்னவென்றால், ஆறு வகை செழுமைகளையும் நிறைவாக பெற்றவர், அவர்தான் பகவான்."
670303 - சொற்பொழிவு SB 07.06.01 - சான் பிரான்சிஸ்கோ