TA/670303b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"விளையாடிக் கொண்டிருக்கும் இந்த குழந்தை ஒரு சிறிய உடலை கொண்டுள்ளான். இதேபோல் அவனது தந்தையை போன்றதொரு உடலைப் பெறும்போது, ஏகப்பட்ட உடல்களை மாற்றியிருப்பான். ஏகப்பட்ட உடல்கள் மாறும், ஆனால் அவன், ஆத்மா மாறாதிருப்பான். குழந்தைப் பராயத்திலோ, அவனது தாயின் கருவறையிலோ, அவனது தந்தையைப் போன்றதொரு உடலிலோ, அவனது பாட்டனைப் போன்றதொரு உடலிலோ, அதே ஆத்மா தான் தொடர்கிறது. எனவே, ஆத்மா நிரந்தரமானது, உடல் மாறுகின்றது. இது பகவத் கீதையில் விளக்கப்பட்டுள்ளது: அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தா꞉ ஷரீரிண꞉ (BG 2.18). இந்த உடல் தற்காலிகமானது. குழந்தை பராய உடலோ, சிறுவனின் உடலோ, இளைஞனின் உடலோ, முதிர்ந்த உடலோ, வயோதிப உடலோ, இவை அனைத்துமே தற்காலிகமானவை. ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு நொடியும், நாம் மாற்றிக் கொண்டே இருக்கிறோம். ஆனால் உடலினுள் இருக்கின்ற ஆத்மா நிலையானது."
670303 - சொற்பொழிவு SB 07.06.01 - சான் பிரான்சிஸ்கோ