"அத்ரைவ ம்ருʼக்ய꞉ புருஷோ நேதி நேதி. இபோது நீங்கள் பகுத்து ஆராய வேண்டும். எது ஆன்மா, எது ஆன்மா இல்லை. அதற்கு அறிவு வேண்டும். நான் உங்களுக்கு அன்று ஒரு நாள் விவரித்தது போல், அதாவது நீங்கள் சுயமாக சிந்தித்தால், தானே தியானம் செய்தால், அதாவது "நான் இந்த கையா? நான் இந்த காலா? நான் இந்த கண்ணா? நான் இந்த காதா?" ஒ, நீங்கள் கூறுவீர்கள், "இல்லை, இல்லை, இல்லை, நான் இந்த கையல்ல. நான் இந்த காலல்ல." நீங்கள் புரிந்துக் கொள்வீர்கள். நீங்கள் தியானம் செய்தால், நீங்கள் புரிந்துக் கொள்வீர்கள். ஆனால் நீங்கள் உணர்வு என்னும் ஒரு நிலைக்கு வந்ததும், நீங்கள் சொல்வீர்கள், "ஆம், நான் இதுதான்." இதுதான் தியானம். இதுதான் தியானம், நீங்களே பகுத்து ஆராய்தல்."
|