"எனவே பகவான்-உணர்தல் பௌதிக செழிப்பை சார்ந்தது அல்ல. பௌதிக செழிப்பு என்றால் உயர்ந்த குடும்பத்தில் பிறப்பது, ஜன்ம. ஜன்ம என்றால் உயர்ந்த குலம். பிறகு... ஞன்மைஸ்வர்ய, மேலும் செல்வம், நிறைந்த சொத்து. இவைதான் பௌதிக செழிப்பு: உயர்ந்த குலம், நிறைந்த சொத்து, உயர்ந்த கல்வி மேலும் நிறைந்த அழகு. இந்த நான்கும் பௌதிக செழிப்பு. ஞன்மைஐஸ்வர்ய-ஸ்ருத-ஸ்ரீ (ஸ்ரீ.பா. 1.8.26). ஜன்ம என்றால் பிறப்பு, ஐஸ்வர்ய என்றால் செல்வம், ஸ்ருத என்றால் கல்வி மேலும் ஸ்ரீ என்றால் அழகு. ஆகவே பகவான்-உணர்தலுக்கு இந்த தகுதிகள் அவசியமில்லை, ஆனால் கிருஷ்ண பக்தி இயக்கத்திற்கு இவைகளை உபயோகிக்கலாம். ஆகவே எதுவும் தவிற்க்கப்படாது. அது மற்றொரு குறிக்கோள். ஆனால் யாராவது "எனக்கு இவை அனைத்து செழிப்பும் இருக்கிறது; ஆகையினால் பகவான்-உணர்தல் எனக்கு மிகவும் சுலபமானது" என்று நினைத்தால், இல்லை, அது இல்லை."
|