TA/680306 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பகவத் கீதையில் நீங்கள் காணபீர்கள், ஸர்வஸ்ய சாஹம்ʼ ஹ்ருʼதி ஸந்நிவிஷ்டோ (ப.கீ 15.15). கிருஷ்ணர் கூறுகிறார் அதாவது "நான் எல்லோருடைய இதயத்திலும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்." ஸர்வஸ்ய சாஹம்ʼ ஹ்ருʼதி ஸந்நிவிஷ்டோ மத்த꞉ ஸ்ம்ருʼதிர் ஜ்ஞானம் அபோஹனம்ʼ ச: "மேலும் என் மூலமாக ஒருவருடைய மறதியும், ஞாபகமும் ஏற்படுகிறது." ஆக ஏன் கிருஷ்ணர் அவ்வாறு செய்கிறார்? அவர் ஒருவருக்கு மறக்க உதவி செய்கிறார், மேலும் ஒருவருக்கு ஞாபகத்தை கொடுத்து உதவி செய்கிறார். ஏன்? அதே பதில்தான்: யே யதா மாம்ʼ ப்ரபத்யந்தே. நீங்கள் கிருஷ்ணரை அல்லது பகவானை மறக்க விரும்பினால், உங்களுக்கு இறுதிரை அவரை மறக்கும் விதத்தில் அறிவை கொடுப்பார். பிறகு பகவானின் பகுதிக்கு தற்செயலாக கூட வரும் வாய்ப்பு இருக்காது. ஆனால் கிருஷ்ணரின் பக்தர்கள் மிகவும் கருணை நிறைந்தவர்கள். கிருஷ்ணர் மிகவும் கண்டிப்பானவர். யாரவது அவரை மறக்க விரும்பினால், அவருக்கு பல சந்தர்ப்பங்கள் அளிப்பார், அதாவது கிருஷ்ணர் யார் என்று அவர்கள் புரிந்துக் கொள்ளவே முடியாது. ஆனால் கிருஷ்ணரின் பக்தர்கள் கிருஷ்ணரைவிட மிகவும் கருணை நிறைந்தவர்கள். ஆகையினால் அவர்கள் கிருஷ்ண உணர்வு அல்லது தெய்வ பக்தியை ஏழை மக்களுக்கு போதிக்கிறார்கள்."
680306 - சொற்பொழிவு SB 07.06.01 - சான் பிரான்சிஸ்கோ