TA/680320 காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஜீவாத்மாக்கள் பகவத் கீதையில் ஸர்வக என்று வர்ணிக்கப்பட்டுள்ளனர். ஸர்வக என்றால் இந்த பிரபஞ்சத்திற்குள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். அவர் ஆன்மீக வானத்தினுள்ளும் போகலாம். ஸர்வக என்றால் அவர் விரும்பும், அனைத்து இடமும் உள்ளடக்கியது. நான் நேற்று விளக்கியது போல், நேற்று இரவு, யாந்தி தேவ-வ்ரதா தேவான் (ப.கீ. 9.25). அவர் விரும்பினால், தேவர்களின் லோகத்திற்கும், பித்ர்லோகத்திற்கும், போகலாம், இங்கேயும் இருக்கலாம், அல்லது அவர் விரும்பினால், கிருஷ்ணர் இருக்கும் கோளிற்கும் செல்லலாம். அவருக்கு இந்த சுதந்திரம் உள்ளது. எவ்வாறு என்றால் பல அரசாங்க பதவிகள் இருப்பது போல். நீங்கள் ஏதாகிலும் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம், ஆனால் அதற்கு ஏற்ற தகுதி பெற்றிருக்க வேண்டும். ஆக இது தகுதியை பொறுத்தது, நீங்கள் எவ்வாறு தேவர்களின் லோகத்திற்கும், பித்ர்லோகத்திற்கும், போகலாம் என்பது."
680320 - காலை உலா Excerpt - சான் பிரான்சிஸ்கோ