TA/Prabhupada 0723 - உயிரிலிருந்து இரசாயனங்கள் உருவாகின்றன; ஆனால் இரசாயனங்களிலிருந்து உதிர் உருவாகவில்ல
(Redirected from TA/Chemicals Come From Life; Life Does Not Come From Chemical)
Lecture on BG 7.4 -- Bombay, February 19, 1974
பிரபுபாதர்: ஆக, ஆத்மா என்று ஒன்றும், ஸ்தூல உடல் என்ற ஒன்றும் உள்ளது. மேலும் ஒரு சூட்சும உடலும் உள்ளது. அதன் அடிப்படை ஆத்மாதான், ஆனால் நாம் முன்பே விளக்கியபடி ஒரு உடலை பெறுவதற்காக, தந்தை மற்றும் தாயிடமிருந்து சுரந்த நீர்கள் கலந்து, கலவையாகி ஒரு பட்டாணியின் அளவிலான வடிவத்தைப் பெறுகிறது. மேலும் அந்த ஆத்மா, தந்தையின் விந்துவிலிருந்து வந்து, அங்கே இருக்கிறது. அதற்குப் பின், உடல் வளர்ச்சி ஏற்படுகிறது. இப்போது, தயவு செய்து புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். ஒரு ஆத்மா உள்ள காரணத்தினால் தான், ஜட உடல் வளர்ச்சி பெறுகிறது. ஆத்மா இல்லை என்றால், அந்தக் குழந்தை இறந்திருந்தால், வளர்ச்சி இல்லை. அதற்குப் பின் வளர்ச்சி என்பதே இல்லை. இறந்த குழந்தை வளராது என்பது எல்லோரும் அறிந்ததே. எனவே, இந்த பௌதிக மூலப்பொருட்கள் ஆத்மாவிடம் இருந்துதான் வருகின்றன, ஆத்மா பௌதிக பொருட்களிடமிருந்து வருவதில்லை. அப்படி கிடையாது. இது தவறான கொள்கையாகும். ஜட விஷயங்களின் சேர்க்கையினால் வருவதாகக்கொண்டால், பிறகு ஏன் உங்களால்...... ஒரு உயிர்வாழியைக் கூட பரிசோதனைக் கூடத்தில் உருவாக்க முடியவில்லை. பரிசோதனை கூடத்தில்,.... இல்லை, அது முடியாது. காரணம், ஒரு ஜடப் பொருள்.... பௌதிகப் படைப்பிற்கு காரணம், நான் இத்தகைய சூழ்நிலையில் இருக்க வேண்டும் என்று விருப்பப்பட்டதும், மேலும் அனுமன்தா, உன்னத இறைவன், அவர் தான் உன்னத அனுமதிப்பாளர்-- குறிப்பிட்ட வகையான தாயின் உடலில் புகுவதற்கு எனக்கு வாய்ப்பு அளித்ததினால் தான். அதனால் தான் ஜடம் வளர்கிறது.
எனவே உண்மை என்னவென்றால், ஒரு ஆத்மா இருந்ததால் தான் சக்தி, பௌதிக சக்தி வெளிப்படுகிறது. உதாரணத்திற்கு..... உதாரணமாக, வேதியல் பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது, ஒரு எலுமிச்சை மரத்தை எடுத்துக் கொள்ளுங்கள் அது ஒரு உயிர்வாழி, அது நூற்றுக்கணக்கான பவுண்ட் அளவிற்கு சிட்ரிக் அமிலத்தை தயாரிக்கும் தன்மை உடையது. எலுமிச்சை எல்லோரும் அறிவர். நீங்கள் இன்று 50 எலுமிச்சை எடுத்துக் கொள்ளவும், மறுபடி இன்னொரு ஐம்பது எலுமிச்சை எடுத்துக் கொள்ளுங்கள், மேலும் அதனை சாறு பிழிந்தால், நீங்கள் அதிக அளவு சிட்ரிக் அமிலத்தை காணலாம். இந்த சிட்ரிக் அமிலம் எனப்படும் வேதிப்பொருட்கள் எங்கிருந்து வந்தன? காரணம், அந்த மரத்தில் ஒரு உயிர்வாழி உள்ளது தான். எனவே முடிவு என்னவெனில், வேதியல் பொருட்கள் உயிரிலிருந்து தான் தோன்றுகின்றன; உயிர், வேதியல் பொருட்களிலிருந்து உண்டாகிறது என்பதல்ல. உயிர், வேதியல் பொருட்களில் இருந்து தோன்றுவதாக இருந்தால், பிறகு நீங்களே உருவாக்கலாம். உங்களுக்கு என்னென்ன வேதியல் பொருட்கள் தேவைப்படுகிறதோ, அதை நான் அளிக்கிறேன். எனவே வேதியல் பொருட்கள் உருவாக்கப்படுகிறது. உடல் வியர்க்கும் போது, இந்த அனுபவத்தை நீங்கள் பெற்றிருப்பீர்கள். வியர்வையை சுவைத்து பார்த்தால் உப்பு கரிக்கும். எங்கிருந்து அந்த உப்பு வந்தது? உப்பு அதன் வேதியல் பெயர் என்ன? சோடியம் கார்பனேட்? இல்லை?
பக்தர்: குளோரைடு.
பிரபுபாதர்: சோடியம் குளோரைடு, சோடியம் குளோரைடு. சோடியம் குளோரைடு எங்கிருந்து வந்தது? அது உங்கள் உடலில் இருந்து வந்தது, மேலும் உங்கள் உடல் ஆத்மாவிடம் இருந்து வந்தது. எனவே சோடியம் குளோரைடு உண்மையில் ஆத்மாவிடம் இருந்து வந்தது. எனவே, நீங்கள் உங்கள் உடலில் இருந்தோ அல்லது மரத்தின் உடலிலிருந்து அல்லது வேறு எதன் உடலிலிருந்து கூட சிறிதளவு வேதிப்பொருட்களை ஆராய்ந்து பார்த்தீர்களானால், அளவில்லாத, மிகப்பெரிய, கிருஷ்ணரின் உடலிலிருந்து, விஸ்வரூபத்தில் இருந்து, எவ்வளவு வேதியல் பொருட்கள் வரும் என்று கற்பனை செய்து பாருங்கள். எனவே இவற்றை எல்லாம் கற்பனை என்று நினைக்காதீர்கள். கிருஷ்ணர் கூறுகிறார்
- பூமிர் ஆபோ 'நலோ வாயு:
- கம்' மனோ புத்திர் ஏவ ச
- அஹங்கார இதீயம்' மே
- பின்னா ப்ரக்ரு'திர் அஷ்டதா
- (ப.கீ 7.4)
"இந்த எட்டு வகையான ஜடப் பொருட்கள், ஸ்தூல மற்றும் சூட்சும பொருட்கள், இவை என்னுடைய சக்தியாகும்." இது கிருஷ்ணரிடம் இருந்து வந்திருக்கிறது. நீங்கள்...... கிருஷ்ணர் முட்டாள்தனமான எந்த விஷயத்தைப் பற்றியும் பேசவில்லை. அவர் உங்களை ஏமாற்றப் பார்க்கவில்லை. குறைந்தபட்சம் முன்னேறியவர்கள், நீங்கள் ஏன் பகவத் கீதையைப் படிக்கிறீர்கள்? காரணம் இது அதிகார பூர்வமானது; கிருஷ்ணர் பேசுகிறார். இதுதான் உண்மை. மிக உயர்ந்த அதிகாரி. நாம் ஞானத்தை அதிகாரிகளிடமிருந்து பெறவேண்டும். நம்மால் ஞானத்தை உருவாக்க முடியாது. அது சரியல்ல..... அது குறைபட்ட ஞானம். காரணம் நம்முடைய புலன்கள் குறைபாடுள்ளவை.