TA/Prabhupada 0062 - இருபத்தி-நான்கு மணி நேரமும் கிருஷ்ணரை பாருங்கள்



Lecture on SB 1.8.18 -- Chicago, July 4, 1974

பிரபுபாதர்: ஆராதிதொ யதி ஹரிஸ் தபஸா தத: கிம். உங்களுக்கு கிருஷ்ணரை வழிப்படும் வாய்ப்பு இருந்தால், பிறகு மேற்கொண்டு துறவறமொ, பிராயச்சித்தமோ தேவையில்லை, ஏனென்றால் தன்உணர்தலுக்கும் அல்லது இறைவனைப் பற்றி அறிந்துக் கொள்வதற்கும் பல செய்முறைகள் உள்ளன, துறவறம், பிராயச்சித்தம். சில நேரங்களில் நாம் காட்டிற்குச் செல்வோம், காட்டிற்குச் சென்று இறைவன் எங்கிருக்கிறார் என்று பார்ப்போம், அங்கே பல செயல்முறைகள் உள்ளன, ஆனால் சாஸ்திர சொல்கிறது, உண்மையிலேயே நீங்கள் கிருஷ்ணரை வழிபட்டுக் கொண்டிருந்தால், ஆராதிதொ யதி ஹரிஸ் தபஸா தத: கிம், நீங்கள் கடும் பிராயச்சித்தமோ துறவறமொ மேற்கொள்ள அவசியமில்லை. மேலும் நராதிதொ, நராதிதொ யதி ஹரிஸ் தபஸா தத: கிம், மேலும் இறுதியாக கடுமையான துறவறமொ, பிராயச்சித்தமோ, மேற்கொண்ட பின், கிருஷ்ணர் யார் என்று உங்களுக்குத் தெரியவில்லை என்றால், பிறகு பயன் என்ன? அது பயனற்றுவிடும். நராதிதொ யதி ஹரிஸ் தபஸா தத: கிம், அந்தர் பஹிர் யதி ஹரிஸ் தபஸா தத: கிம். அதேபோல், உங்களால் இருபத்தி-நான்கு மணி நேரமும் கிருஷ்ணரை, உள்ளும் புறமும் பார்க்க முடிந்தால், பிறகு அதுதான் அனைத்து தபஸ்யாவின் இறுதி. ஆகையால் இங்கு கிருஷ்ணர் மீண்டும் கூறுகிறார், குந்தி கூறுகிறார் அதாவது "கிருஷ்ணர் உள்ளும் புறமும் இருந்தாலும், அவரை காணக் கூடிய கண்கள் நம்மிடம் இல்லாததால்," அலக்ஷியம், "கண்ணுக்கு தெரியவில்லை." உதாரணத்திற்கு இங்கே குருஷேத்தர போருக்கு கிருஷ்ணர் வந்திருந்தார், ஐந்து பாண்டவர்கள் மட்டுமே, அத்துடன் அவர்கள் தாயார் குந்தி, கிருஷ்ணர் முழுமுதற் கடவுள் என்று அவர்களுக்கு புரிந்திருக்கிறது, இன்னும் மற்றவர்கள் சிலபேர். கிருஷ்ணர் வந்திருந்த போதிலும், சிலபேர் அவரை சாதாரண மனித இனம் என்று எண்ணினர். அவஜா, அவஜானந்தி மாம் மூடா மானுஸிம் தனம் ஆஸிரிதம். அவர் மனித சமுதாயத்திடம் இரக்கம் கொண்டதால், அவர் நேரில் வந்தார். இருப்பினும், அவரை பார்க்க அவர்களுக்கு கண்கள் இல்லாததால், அவர்களால் பார்க்க முடியவில்லை. ஆகையினால் குந்தி கூறுகிறார், அலக்ஷியம், "உங்களை கண்ணுக்கு தெரியவில்லை, ஆயினும் நீங்கள் அந்த: பஹி, ஸர்வ-பூதானாம். பக்தர்களுடைய அந்த: பஹி மட்டுமல்ல அனைவருடையாடும். கிருஷ்ணர் அனைவருடைய இதயத்திலும் நிறைந்திருக்கிறார், ஈஸ்வர: ஸர்வ-பூதானாம் ஹிர்த-தெஸ. சுட்டிக்காட்டினால், ஹிர்த-தெஸ, இங்கு இந்த இதயத்தில் கிருஷ்ணர் இருக்கிறார். ஆகையினால், தற்போது, தியானம், யோக நெறிமுறை இதயத்தினுள் இருக்கும் கிருஷ்ணரை தேடிக் கண்டறிய உதவுகிறது. அதைத்தான் தியானம் என்கிறோம். ஆகையால் கிருஷ்ணரின் நிலை எப்பொழுதும் உன்னதமானது. நாம் இந்த உன்னத நிலையின் செயல்முறையை ஏற்றுக் கொண்டால், கிருஷ்ணர் உணர்வு, ஒழுங்கான கொள்கைகள், பின் பாவச் செயலில் இருந்து விடுபட முயற்சிக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் பாவச் செயலில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது கிருஷ்ணரை பார்க்கவோ, அல்லது புரிந்துக் கொள்ளவோ முடியாது. பிறகு அது சாத்தியமாகாது. ந மாம் துஷ்கிரிதினொ மூடா: ப்ரபத்யன்தெ நராதாமா:. துஷ்கிரிதினாவாக இருப்பவர்கள், கிரிதி என்றால் திறமை, பாராட்டத்தக்க, ஆனால் துஷ்கிரிதி, இருந்தபோதிலும் திறமை பாவச்செயலுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆகையால், நாங்கள் கேட்டுக் கொள்கிறோம், நாங்கள் வேண்டுகோள் இடமாட்டோம்; இது எங்கள், நான் சொல்வதாவது, விதிகளும் விதிமுறைகளும், அதாவது ஒருவர் பாவச் செயல்களிலிருந்து விடுபட வேண்டும். பாவச் செயல்கள், பாவம் நிறைந்த வாழ்க்கையின் நான்கு தூண்கள், யாதெனில், புறக்கணிக்கப்பட்ட உடலுறவு, மாமிசம் உண்பது, குடி பழக்கம், சூதாட்டம். ஆகையால் எங்கள் மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டனர், அறிவுறுத்தல் அல்ல, அவர்கள் பின்பற்ற வேண்டும்; இல்லையெனில் அவர்கள் தவறிவிடுவார்கள். ஏனென்றால் பாவம் நிறைந்த மனிதரால் இறைவனை புரிந்துக் கொள்ள முடியாது. ஒருபுறம் நாம் விதிகளையும் விதிமுறைகளையும் அத்துடன் பக்தி தொண்டும் பயிற்சி செய்ய வேண்டும், மற்றொரு புறம் நாம் பாவச் செயல்களை தவிர்க்க வேண்டும். அப்பொழுதுதான் கிருஷ்ணர் தோன்றுவார், நீங்கள் கிருஷ்ணருடன் பேசலாம், நாம் கிருஷ்ணருடன் இருக்கலாம். கிருஷ்ணர் மிகுந்த கருணையுள்ளவர். உதாரணத்திற்கு தன் மருமகனிடம் பேசுவதைப் போல் குந்தி கிருஷ்ணரிடம் பேசுகிறார், அதேபோல் கிருஷ்ணரிடம் உங்கள் மகனாக, உங்கள் கணவராக நீங்கள் பேசலாம், உங்கள் காதலராக, உங்கள் நண்பனாக, உங்கள் முதலாளியாக, நீங்கள் விரும்பியபடி. ஆகையால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன், இந்த சிக்காகோ கோயிலைக் கண்டு. நீங்கள் மிக அழகாக செய்கிறீர்கள், அத்துடன் இந்த அரங்கமும் மிக அழகாக இருக்கிறது. ஆகையால் உங்கள் தொண்டு மனப்பாங்குடன் தொடர்ந்து அத்துடன் கிருஷ்ணரை உணருங்கள். பிறகு உங்கள் வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கும். மிக்க நன்றி.

பக்தர்கள்: ஜெய்! ஹரி போல்!