TA/Prabhupada 0085 - அறிவின் கலாச்சாரம் என்றால் ஆன்மீக அறிவு



Lecture on Sri Isopanisad, Mantra 9-10 -- Los Angeles, May 14, 1970

"விவேகமுள்ளவர்கள் நமக்கு விவரித்துள்ளார்கள் அதாவது, ஒரு விடை கலாச்சாரத்தைப் பற்றிய அறிவிலிருந்து பெறப்படுகிறது, மேலும் வேறுபட்ட முடிவுகள் கலாச்சாரத்தின் அறிவின்மையால் கிடைக்கப்படுகின்றன என்று கூறப்படுகிறது." நேற்று நாம் கலாச்சாரத்தின் அறியாமை என்ன என்பதை ஓரளவுக்கு விளக்கி கூறினோம். மேலும் அறிவின் கலாச்சாரம் என்பது என்ன? அறிவின் கலாச்சாரம் என்றால் ஆன்மீக அறிவு. அதுதான் உண்மையான அறிவு. மேலும் வசதிக்காக முன்னேற்றம் அடையும் அறிவு அல்லது இந்த ஜட உடலை பாதுகாக்க, அதுதன் அறியாமையின் கலாச்சாரம். ஏனென்றால் நீங்கள் இந்த உடலை பாதுகாக்க எப்படி முயற்சி செய்தாலும், அதன் இயற்கையான நடைமுறை கண்டிப்பாக நிகழும். அது என்ன? ஜன்ம ம்ருத்யு ஜரா வ்யா (ப.கீ. 13.9)(ப.கீ.13.9). இந்த உடலை பிறப்பு, இறப்பு என்னும் சுழலில் இருந்து உங்களால் விடுவிக்க முடியாது, மேலும் பிறப்பெடுக்கும் போது, நோய், முதுமை ஏற்படும். இந்த உடலின் கலாச்சார அறிவு வளர்ச்சிக்கு மக்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள், இந்த உடல் ஒவ்வொரு கணமும் சிதைந்துக் கொண்டிருக்கிறது என்பதை பார்த்துக் கொண்டிருந்தும். உடலின் இறப்பு அது பிறந்தவுடனேயே பதிவு செய்யப்பட்டுவிட்டது. அது அனுபவச் செய்திக் குறிப்பு. ஆகையால் இந்த உடலின் இயற்கையாக செல்லும் முறையை நீங்கள் தடுக்க முடியாது. உடலின் செயல்முறையை நீங்கள் சந்திக்க வேண்டும், குறிப்பாக, பிறப்பு, இறப்பு, முதுமையும் நோயும். ஆகையால் பாகவதம் கூறுகிறது, யஸ்யாத்ம-புத்தி: குணபே த்ரி-தாதுகே (ஸ்ரீ. பா. 10.84.13). இந்த உடம்பு மூன்று முதன்மையான மூலப்பொருளால் ஆனது: சளி, பித்த நீரும் காற்றும். அதுதான் வேத பதிப்பு மேலும் ஆயுர்வேதிக் வைத்தியம். இந்த உடல் சளி, பித்த நீரும் காற்றும் நிறைந்த ஒரு பை. முதுமையில் காற்றின் சுழற்சி தொந்தரவு செய்கிறது; ஆகையினால், முதியவருக்கு வாதநோய், உடலின் பலவிதமான நோய்கள் ஏற்படுகிறது. ஆகையால் பாகவதம் கூறுகிறது, "பித்த நீர், சளி, மேலும் காற்று இவற்றின் பிணைப்புதான் தன் உடல் என்று ஏற்றுக் கொண்ட ஒருவர், அவர் ஒரு கழுதை." நடைமுறையில், இது உண்மையே. இந்த பித்த நீர், சளியும் காற்றின் பிணைப்பும்தான் நாம் என்று ஏற்றுக் கொண்டால், ஆக அறிவுடையவர்கள், மிக உயர்ந்த தத்துவ ஞானிகள், விஞ்ஞானிகள், அவர் பித்த நீர், சளி, காற்று இவற்றின் பிணைப்பு என்று அர்த்தமா? இல்லை, இதுதான் தவறு. அவர் இந்த பித்த நீர், சளி அல்லது காற்றிலிருந்து வேறுபட்டவர். அவர் ஆன்மா. அவருடைய கர்மாவிற்கேற்ப, சான்றாக படைக்கப்பட்டு தன் திறமையை காட்டுகிறார். ஆகையால் அவர்களுக்கு கர்மாவைப் பற்றி, கர்மாவின் சட்டம் பற்றி புரியவில்லை. நாம் ஏன் பலதரப்பட்ட தனிமனிதச் சிறப்புடையவர்களைக் காண்கிறோம்?