TA/Prabhupada 0086 - அங்கே ஏன் சமச்சீரற்ற நிலை இருக்கிறது



Sri Isopanisad, Mantra 9-10 -- Los Angeles, May 14, 1970

நாம் என் பல தரப்பட்ட மனிதர்களை பார்க்கிறோம்? பித்தம், சளி மற்றும் காற்றின் கூட்டு வடிவம் என்றால், என் அவை ஒன்றை போல இல்லை? அவை இந்த அறிவை பேணி வளர்ப்பதாக இல்லை. ஏன் இந்த வேற்றுமை? ஓர் மனிதன் மிக பெரிய செல்வந்தனாக பிறக்கிறான்.. மற்ற ஒருவனோ ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பாடு சாப்பிட வழி இல்லாமல் பிறக்கிறான்.. மிகுந்த கஷ்டப்பட்ட போதிலும்.. ஏன் இந்த பாரபட்சம்? ஒருவர் மிகவும் வசதியான இடத்தில் படைக்க பட்டு உள்ளார் ஆனால் மற்றொருவருக்கு அது இல்லை. அது கர்ம விதி. தனி தன்மையுடையது. இதுவே அறிவு. ஆகவே, ஈஷௌுபநித் சொல்கிறது, அணியத் எவ்āஹர் விடியாய்ā அணியத் āஹர் அவிடியாய்ā யாரெல்லாம் அறியாமையில் இருக்கிறார்களோ, அவர்கள் வேறு விதமான அறிவை நோக்கி தங்களது கவனத்தை செலுத்துகிறார்கள். யாருக்கெல்லாம் உண்மையில் அறிவு இருக்கிறதோ, அவர்கள் வேறு விதமாக தங்களது கவனத்தை செலுத்துகிறார்கள். சாதாரண மனிதனுக்கு நமது கிருஷ்ண பக்தி நடவடிக்கைகளில் விருப்பம் இல்லை. அவர்கள் ஆச்சரிய படுகிறார்கள். எங்கிருந்து நீங்கள் இவ்வளவு பணம் பெறுகிறீர்கள் ? என்று மக்கள் கேட்பதாக நேற்று சாயங்காலம் கார்க முனி என்னிடம் சொன்னார். நீங்கள் நிறையவே சீருந்துகள் மற்றும் கிருஸ்துவ ஆலயங்களுக்காக பெரிய இடங்களை வாங்குகிறீர்கள்.. தினமும் 50-60 ஆட்களை வேலைக்கு வைத்து சந்தோஷ்மாக இருக்கிறீர்கள்.... இது என்ன..? ( சிரிப்பொலி) ஆகவே அவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். ஏன் இந்த கயவர்கள் வயிற்றை நிரப்பி கொள்வதற்காக இவ்வளவு கடினமாக உழைக்கிறார்கள் என்று நாமும் ஆச்சரிய படுகிறோம் பகவத் கீதை சொல்கிறது " ய்ā நீśā சர்வ-ப்ūத்āன்āṁ தாசிāṁ ஜுāகிரதி சṁயாம்ī." இந்த மக்கள் தூங்கி கொண்டிருப்பதாக நாம் பார்க்கிறோம். அவர்கள், நாம் நமது நேரத்தை வீண் செய்து கொண்டிருப்பதாக பார்க்கிறார்கள். ஏன் இந்த நேர் மாறான பார்வை? ஏனென்றால், அவர்களுடைய செயல் படும் விதமும், நமது செயல் படும் விதமும் வெவ்வேரானாது. இப்பொழுது, புத்தி கூர்மையுள்ள மனிதனால் இவற்றில் எது உண்மையில் சரியானது என்று முடிவு செய்யப்பட வேண்டும். வேத இலக்கியங்களில் இது அழகாக விவாதிக்க பட்டுள்ளது. ஈஷௌுபநிஷ்த் போலவே மற்றொரு உபநிஷத், கார்க உபநிஷத். கணவன் மற்றும் மனைவிக்கும் இடையே நடந்த உரையாடல். கணவன் மனைவிக்கு கற்று தருகிறார் ஏத்தத் விதிதுவ்ā யḥ பிராய்āடி ச ஏவ ப்ர்āமாṇஅ கற்கி ஏத்தத் ாவிடிதுவ்ā யḥ பிராய்āடி ச ஏவ க்ṛபண்ā இது உண்மையான பாரம்பரியம் பற்றிய அறிவு. யார் ஒருவர்... பிறக்கும் ஒவ்வொருவரும் இறக்க வேண்டும். அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. நாமும் இறக்க போகிறோம், அவர்களும் இறக்க போகிறார்கள். நீங்கள் பிறப்பு, இறப்பு, மூப்பு மற்றும் நோய்கள் இவைகளை பற்றியே நினைத்து கொண்டு இருக்கிறீர்கள்" என்று சொல்லலாம். கிருஷ்ண பக்தியை / அறிவை பரப்புவதனால், இயற்கையின் இடர் பாடான நான்கு விதிகளில் இருந்து நீங்கள் விடுபட முடியும் என்று சொல்கிறீர்களா? இல்லை. அது உண்மை இல்லை. உண்மை எதுவெனில், கார்க உபநிஷத் சொல்கிறது, ஏத்தத் விதிதுவ்ā யḥ பிராய்āடி அவர் தன்னை என்னவென்று அறிந்த பின், இந்த உடலை துறக்கும் பொழுது, ச ஏவ ப்ர்āமாṇஅ. அவர் ஒரு பிராமணர். பிராமணர்... நாங்கள் உங்களுக்கு பூநல் கொடுக்கிறோம் ? ஏன் தெரியுமா? வாழ்க்கையின் புதிர் நிலையை புரிந்து கொள்ள முயற்சி செய்வதற்காகவே. அதுதான் பிராமண விஜ்āநாதḥ. நாம் வரிகளை வாசித்து உள்ளோம். விஜ்āநாதḥ இந்த விஷயங்களை தெரிந்து பின் தனது உடலை துறப்பவர் எவரோ அவரே பிராமணர்.