TA/Prabhupada 0171 - நல்ல அரசாங்கம் ஏற்பட வர்ணாஸ்ரம தர்மம் வேண்டும்



Lecture on SB 1.2.28-29 -- Vrndavana, November 8, 1972

ஆக இந்த வர்ணாஸ்ரம அமைப்பின்படி மக்களுக்கு பயிற்சி வழங்கப்பட்ட வேண்டும். நல்ல பிராமணர்களாக சிலருக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். சிலருக்கு நல்ல க்ஷத்திரியர்கள் ஆவதற்கும், சிலருக்கு நல்ல வைசியர்கள் ஆவதற்கும் பயிற்றுவிக்கப்படவேண்டும். மேலும் சூத்திரர்கள் ஆவதற்கு எந்த பயிற்சியும் தேவை இல்லை... ஏற்கனவே அனைவரும் சூத்திரர்கள் தான். ஜன்மனா ஜாயதே ஷூத்ரஹ. பிறப்பால் எல்லோரும் சூத்திரர்கள் தான். ஸம்ஸ்காராத் பவேத் த்விஜஹ. ஒருவர் வைசியர் ஆவதும், க்ஷத்திரியன் ஆவதும், பிராம்மணன் ஆவதும் பயிற்சியால் தான். அப்படிப்பட்ட பயிற்சி எங்கே? எல்லாம் சூத்திரர்கள். பிறகு எப்படி ஒரு நல்ல அரசாங்கத்தை எதிர்பார்க்க முடியும், சூத்திர அரசாங்கம்? எல்லாம் சூத்திரர்கள் மற்றும் தில்லுமுல்லு செய்து வாக்குகளை வாங்குகிறார்கள். பிறகு அரசாங்க பதவியையும் கைப்பற்றுகிறார்கள். ஆக அவர்களுக்கு ஒரே வேலை தான்..., குறிப்பாக இந்த கலியுகத்தில், 'ம்ளெச்ச ராஜன்ய-ரூபினஹ'. மாமிசம் உண்பதும் மதுவை அருந்துவதும். மலேச்சர்களும் யவனர்களும் அரசாங்கப் பதவியை ஏற்கிறார்கள். எப்படி நல்ல அரசாங்கத்தை எதிர்பார்க்க முடியும்? வர்ணாஸ்ரம தர்மத்தை நிலைநாட்டினால் ஒழிய, எத்தனை லட்சம் ஆண்டுகள் ஆனாலும் நல்ல அரசாங்கத்தை மறந்துவிட வேண்டியது தான். அதுவரை நல்ல அரசாங்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அரசாங்க பொறுப்பை ஏற்க, பரீக்ஷித் மஹாராஜரைப் போன்ற மிகச் சிறந்த, தகுதிவாய்ந்த க்ஷத்திரியனாக இருக்க வேண்டும். அவர் நகர வலம் வரும்போது , ஒரு கருப்பு மனிதன் ஒரு பசுவை சித்திரவதை செய்து கொலை செய்ய முயற்சிப்பதைக் கண்டவுடன், தன் வாளை உடனே எடுத்து: "கொடியவனே! யார் நீ?". அதுதான் க்ஷத்திரியன். அதுதான் வைஷ்யன், பசுக்களை பராமரித்து பாதுகாக்கும் கடமை அவனுடையது. க்ருஷி-கோ-ரக்ஷா-வாணிஜ்யம் வைஷ்ய-கர்ம ஸ்வபாவ-ஜம் (பகவத் கீதை 18.44). அனைத்தும் தெளிவாக இருக்கிறது. இந்த கலாச்சாரம் எங்கே போனது? எனவே தான், இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் மிகவும் முக்கியமாகும். சமூகத் தலைவர்கள் தீவிரமாக கவனம் செலுத்தவேண்டிய விஷயம் இது; உலக சமுதாய சூழலை மேம்படுத்துவது எப்படி. இங்கு மட்டும் அல்ல, உலகெங்கும். சமூகம், அறியாமையில், மாயையில் மூழ்கி செயல்பட்டு வருகிறது. தெளிவில்லாமல். தெளிவான சிந்தனை இதோ இருக்கிறது: வாஸூதேவ-பரா வேதாஹா. வேத, கல்வி, நீங்கள் மக்களுக்கு கல்வி வழங்குகிறீர்கள், ஆனால் மக்களுக்கு வாஸூதேவரைப் பற்றி, கிருஷ்ணரைப் பற்றி கற்பிக்கும் கல்வி எங்கே? பகவத்-கீதை தடை செய்யப்பட்டிருக்கிறது. வாஸூதேவர் தானே தன்னை வெளிபடுத்துகிறார், ஆனால் அது தடை செய்யப்பட்டிருக்கிறது. மேலும் யாராவது ஒரு அயோக்கியன் அதை படித்தாலும் அதிலிருந்து வாஸூதேவரை கழட்டி விடுகிறான். அவ்வளவு தான். கிருஷ்ணரே இல்லாத ஒரு பகவத்-கீதை. இது தான் நடந்து கொண்டிருக்கிறது. எல்லாம் முட்டாள்தனம். இப்படிப்பட்ட முட்டாள்கள் சமுதாயத்தில் மனித நாகரீகத்தை எதிர்பார்க்க முடியாது. மனித வாழ்வின் உண்மையான லட்சியம் இங்கிருக்கிறது: வாஸூதேவ-பரா வேதா வாஸூதேவ-பரா மகாஹா, வாஸூதேவ-பரா யோகாஹா. பல யோகிகள் இருக்கிறார்கள். என்னால் தெளிவாக சொல்லமுடியும், வாஸூதேவர் இல்லாமல், யோகம் - வெறும் மூக்கை அழுத்துவது, இது யோகம் அல்ல.