TA/Prabhupada 0224 - உங்ளுடைய உயர்ந்த கட்டிடத்தை அரைகுறையான அடித்தளத்தில் உயர்த்திக் கொண்டே போவது



Arrival Address -- Mauritius, October 1, 1975

மெய்யியல் மனம் சார்ந்த யூகம் அல்ல. மெய்யியல் முதன்மையான விஞ்ஞானம் இதிலிருந்துதான் மற்ற விஞ்ஞானம் தோன்றியது. அதுதான் மெய்யியல். ஆகையால் நம் கிருஷ்ண பக்தி இயக்கம் மக்களை அறிவுள்ளவர்களாக்க முயற்சிக்கிறது இந்த விஞ்ஞானங்களின் விஞ்ஞானத்திலிருந்து முதலில் புரிந்துக் கொள்ள வேண்டியது அதாவது "நீங்கள் யார்?" நீங்கள் இந்த உடல்தானா அல்லது இந்த உடலில் இருந்து வேறுபட்டவரா?" இது அத்தியாவசியமானது. மேலும் நீங்கள் உங்ளுடைய உயர்ந்த கட்டிடத்தை உயர்த்திக் கொண்டே போனால், அரைகுறையான அடித்தளத்தில், பிறகு அது நிற்காது. அங்கு ஆபத்து ஏற்படும். ஆகையால் நவநாகரீகம் இந்த குற்றம் நிறைந்த சிந்தனையை சார்ந்துள்ளது அதாவது "நான் இந்த உடல்தான்." "நான் இந்தியன்," "நான் அமெரிக்கன்," "நான் இந்து," "நான் முஸ்லிம்," "நான் கிறிஸ்துவன்." இவை அனைத்தும் வாழ்க்கையின் உடல் சம்மந்தமான போது கருத்து. "ஏனென்றால் இந்த உடல் எனக்கு ஒரு கிறுத்துவ தாயும் தந்தையும் அளித்தது, ஆகையினால் நான் ஒரு கிறுத்துவன்." ஆனால் நான் இந்த உடல் அல்ல. "ஏனென்றால் இந்த உடல் எனக்கு ஒரு இந்து தாயும் தந்தையும் அளித்தது, ஆகையினால் நான் ஒரு இந்து." ஆனால் நான் இந்த உடல் அல்ல. ஆகையால் ஆன்மிகத்தைப் புரிந்துக் கொள்ள, புரிந்துக் கொள்வதற்கு இதுதான் அடிப்படை கொள்கை, அதாவது, "நான் இந்த உடல் அல்ல, நான் ஆன்மா," அஹம் ப்ரமாஸ்மி. இதுதான் வேத தத்துவம்: "நீங்கள் ஆன்மீக ஆன்மா என்பதை புரிந்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்; நீங்கள் இந்த உடல் அல்ல." சும்மா இதை புரிந்துக் கொள்வதற்காக யோக முறை பயிற்சி செய்யப்படுகிறது. யோக இந்திரிய ஸம்யமஹ. புலன்களை கட்டுப்படுத்துவதன் மூலமாக, முக்கியமாக மனத்தை... மனம்தான் எஜமானர் அல்லது புலன்களின் தலைவர். மன: ஷஷ்டானீந்த்ரியாணி ப்ரக்ருதி-ஸ்தானி கர்ஷதி (பகவத் கீதை 15.7). இந்த மனத்தையும் புலன்களையும் வைத்துக் கொண்டு நாம் வாழ்வதற்கு போராடிக் கொண்டிருக்கிறோம், தவறான மனக்கருத்துப்படி இந்த உடம்பை நாம்தான் என்று அடையாளம் கொள்கிறோம். ஆகையால் புலன்களை கட்டுப்படுத்துவதன் மூலம் நம் மனத்தை ஒரு நிலைப்படுத்தினால், பிறகு நாம் படிப்படியாக புரிந்துக் கொள்வோம். த்யானாவஸ்தித-தத்-கதென மனசா பஸ்யந்தி யம் யோகின: (ஸ்ரீமத் பாகவதம் 12.13.1). யோகிகள், அவர்கள் முழுமுதற் கடவுள் விஷ்ணுவை வேண்டி தியானம் செய்கிறார்கள், மேலும் அந்த செய்முறையினால் அவர்கள் தன்னை உணர்கிறார்கள். தன்னையறியும் விஞ்ஞானம் மனித வாழ்வின் முக்கியமான குறிக்கொள். ஆகையால் தன்னையறியும் விஞ்ஞானத்தின் ஆரம்பம் இதைப் புரிந்துக் கொள்வது அதாவது "நான் இந்த உடல் அல்ல, நான் ஆன்மீக ஆன்மா." அஹம் ப்ரமாஸ்மி. ஆகையால் இந்த விஷயங்கள் பகவத் கீதையில் மிகவும் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது. நாம் சும்மா பகவத் கீதையை கவனமாக, சரியான வழிகாட்டுடன் படித்தால், பிறகு அனைத்தும் தெளிவாகும், எந்த சிரமம்மும் இல்லாமல், அதாவது "நான் இந்த உடல் அல்ல, நான் ஆன்மீக ஆன்மா. வாழ்க்கையின் உடல் சம்மந்தமான எண்ணத்தைவிட என்னுடைய வேலை வேறுபட்டது. இந்த உடலை சுயமாக ஏற்றுக் கொள்வது, எடுத்துக் கொள்வதால் நான் மகிழ்ச்சி அடைய முடியாது. அது அறிவின் தவறான அத்திவாரம்." இவ்வாறாக, நாம் முன்னேற்றம் அடைந்தால், பிறகு நாம் புரிந்துக் கொள்வோம், அஹம் ப்ரமாஸ்மி: "நான் ஆன்மீக ஆன்மா." பிறகு நான் எங்கிருந்து வந்திருக்கிறேன்? அனைத்தும் பகவத் கீதையில் விவரிக்கப்பட்டுள்ளது, அதாவது ஆன்மீக ஆன்மா, கிருஷ்ணர் கூறுகிறார், பகவான கூறுகிறார், மமைவாம்சோ ஜீவ-பூத: (பகவத் கீதை 15.7) "இந்த ஜீவாத்மாக்கள், அவர்கள் என்னுடைய அங்க உறுப்புக்கள், அல்லது சிறிய தீப்பொறிக்கள்." பெரிய தீப்பொறியாகவும் சிறிய தீப்பொறியாகவும், இரண்டுமே தீப்பொறி, ஆனால் பெரிய தீப்பொறி சிறிய தீப்பொறி.... இதுவரை தீப்பொறியன் தன்மையை பொறுத்தவரை, பகவானும் நாமும் ஒன்றே. ஆகையால் நாம் புரிந்துக் கொள்ள முடியும், நம்மை பற்றி கற்றறிந்துக் கொள்வதன் மூலம் நாம் பகவானைப் பற்றி அறிந்துக் கொள்ள முடியும். அதுவும் மற்றொரு தியானம். ஆனால் நாம் அதைப் புரிந்துக் கொள்ளும் போது அது எவ்வாறு பூரணமாகும் என்றால் "தரம் சம்மந்தமாக நான் பகவானின் பண்புக்கூறாக இருந்தாலும் அல்லது ஒரே தரமாக இருந்தாலும், ஆனால் இருப்பினும், அவர் மேலானவர், நான் சிறியவன்." அதுதான் பூரணமான புரிந்துணர்வு. அணு, விபு; பிரமன், பரபிரமன்; ஈஸ்வர, பரமேஸ்வர - இதுதான் பூரணமான புரிந்துணர்வு. ஏனென்றால் பண்புக்கூறாக நான் ஒன்றே, அதனால் நான் பரமன் என்று பொருள்படாது. வேதத்தில் அது கூறப்படுகிறது, நித்யோ நித்யானாம் சேதநஸ் சேதநானாம (கதா உப. 2.2.13). நாம் நித்தியமானவர்கள்; பகவானும் நித்தியமானவர். நாம் உயிரினங்கள்; பகவானும் உயிரினம். ஆனால் அவர் பிரதான உயிரினம்; அவர் பிரதானமான நித்தியமானவர். நாமும் நித்தியமானவர்கள், ஆனால் நாம் பிரதானமானவர்கள் அல்ல. ஏன்? ஏகொ யொ பஹுநாம் விடதாதி காமான். எவ்வாறு என்றால் நமக்கு ஒரு தலவர் தேவைப்படுகிறார், அதேபோல், அவர் ஒப்புயர்வற்ற தலைவர். அவர் பராமரிப்பவர். அவர் இறைவன். அவர் அனைவருடைய தேவைகளையும் வழங்குகிறார். ஆப்ரிகாவில் யானைகள் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அவைகளுக்கு யார் உணவு வழங்குகிறார்கள்? உங்களுடைய அறையில் உள்ள துவாரத்தில் இலட்சக் கணக்கான எறும்புகள் உள்ளன. அவைகளுக்கு யார் உணவூட்டுகிறார்கள்? ஏகொ யொ பஹுநாம் விடதாதி காமான். ஆகையால் இவ்வாறாக, நம்மை நாம் உணர்ந்தால், அதுதான் தன்னையறியும் விஞ்ஞானம்.