TA/Prabhupada 0227 - நான் ஏன் மரணிக்கிறேன்
Lecture -- Los Angeles, May 18, 1972
கிருஷ்ணரை புரிந்து கொள்வது சிறிது கடினம். உண்மையில், கடவுளை புரிந்து கொள்வது மிகவும் கடிமான விஷயம். ஆனால், பகவத் கீதையில் இறைவன் , அவரே அவரை பற்றி விளக்கியிருக்கிறார். நான் இது போல் இருக்கிறேன், இந்த பௌதீக தன்மை இவ்வாறு இருக்கிறது, ஆன்மீக தன்மை இது போன்று இருக்கிறது, வாழும் ஜீவன்கள் இது போன்று இருக்கிறது ."என்று கூறுகிறார். அனைத்துமே பகவத் கீதையில் முழுமையாக விளக்கப்பட்டிருக்கிறது. இறைவன் அவரை பற்றிய அனைத்தையும் அவரே கூறுகிறார், மற்றும் இது ஒன்றே அவரை தெரிந்துகொள்வதற்காக முறை ஆகும். பரிசோதனை மூலம் நாம் கடவுளை புரிந்துகொள்ள முடியாது. அது சாத்தியமல்ல.. அவர் அளவில்லாதவர்.. நாம் வரையறுக்கப்பட்டவர்கள். நம் அறிவு, புலனுணர்வு போன்றவை மிகவும் வரையறுக்கப்பட்டது. அளவில்லாததை நாம் எப்படி உணரமுடியும் ? அவரது கூற்றை நாம் புரிந்து கொண்டால் அவரை நாம் புரிந்து கொள்ள முடியும். இது தான் துல்லியமான அறிவு . யூகஅறிவு ஒருபொழுதும் உபயோகமானது அல்ல. இதற்கு நான் ஒரு உதாரணம் கூறுகிறேன். ஒரு மகனுக்கு தந்தை யார் என்று தெரியவேண்டுமென்றால், தாயிடம் கேட்டு தெரிந்து கொள்கிறான். தாய் இவர் தான் உன் தந்தை என்று கூறுவது உண்மையான அறிவு. நீங்கள் சந்தேகப்பட்டு ஆராய ஆரம்பித்தால் , யார் என் தந்தை என்று அனைவரிடத்திலும் கேட்டுக்கொண்டிருப்பீர்கள். இப்படி இருப்பின், அவரின் தேடல் முழுமை கொள்ளாது. அவரின் தந்தையை கண்டுகொள்ள இயலாது. ஆனால் சுலபமான வழி, தாயிடம் கேட்டு தந்தையை தெரிந்துகொள்வது. "இவர் தான் உன் தந்தை" என்று தாய் கூறுவது சிறந்த அறிவு. அதே போல், எல்லை கடந்த அறிவு,.. நான் முன்னே கூறியது போல், ஆன்மீக உலகம் என்று ஒன்று உள்ளது.. அது யூக அறிவை சார்ந்தது அல்ல. ஆனால், " ஆன்மீக உலகம் என்று ஒன்று உள்ளது, அது என்னுடைய தலைமையகம்" என்று கடவுளே கூறுகிறார் என்றால்.. அது சரியானது. எனவே, சிறந்த அதிகாரியான கிருஷ்ணரிடமிருந்து அறிவைப் பெறவேண்டும். அவ்வாறு செய்தால் நம் அறிவு பூரணத்துவம் பெறுகிறது. நாம் பூரணமானவர்கள் அல்லர். ஆனால் நம் அறிவு பூரணத்துவம் அடையும். ஏனென்றால் நாம் பூரணமானவரிடமிருந்து அறிவைப் பெறுகிறோம். நான் முன்னர் சொல்லிய உதாரணத்தை போல.. என் தந்தை யார் என்று நான் அறிந்துகொள்ளும் அளவிற்கு பூரண அறிவுடையவன் அல்ல. என் தாயாருக்கு அதில் பூரண அறிவு இருக்கிறது. அவருடைய அந்த பூரண அறிவை நான் ஏற்றுக்கொண்டு, என்னுடைய அறிவை பூரணத்துவம் பெற வைக்கிறேன். எனவே இந்த கிருஷ்ண உணர்வு இயக்கம் மனித சமுதாயத்திற்கு சிறந்த அறிவை தருகிறது. அவர் யார், கடவுள் என்பவர் யார், இந்த இயந்திரமயமான உலகம் என்ன, இங்கே நீ ஏன் வந்தாய் .. ஏன் பலவிதமான சிரமங்களுக்கு, பரிதாபத்திற்குரிய நிலைக்கும் ஆளாகிறோம் ? ஏன் மரணிக்கிறோம்? எனக்கு இறப்பதற்கு பிடிக்கவில்லை. ஆனால் மரணம் கட்டாயமானது. எனக்கு முதுமை பிடிக்கவில்லை.. இருந்தும், முதுமை கட்டாயமானது. எனக்கு நோய் பிடிக்கவில்லை, இருந்தும் அது வந்தே தீரும். இவைகளெல்லாம் சரி செய்ய படவேண்டியவை .. மனித வாழ்வின் நிஜமான துன்பங்கள் இவைதான். உணவு , தூக்கம் , உடலுறவு, தற்காப்பு, போன்றவற்றை மேம்படுத்துதல் மட்டுமல்ல வாழ்க்கை. மனிதனும் உறங்குகிறான் , நாயும் உறங்குகிறது. ஒரு அழகான கட்டிடத்திற்குள் உறங்குவதால் மனிதன் , நாயைவிட சிறந்த முறையில் உறங்குகிறான் என்று பொருள் இல்லை. செய்யும் வேலை என்ன.. உறங்குவது ... அவ்வளவே. மனிதன் அணு ஆயுதங்களை தற்காப்புக்காக பயன்படுத்துகிறான்.. நாய் தன் பற்கள் மற்றும் நகங்களை பயன்படுத்துகிறது. அதுவும் தன்னை தற்காத்துக்கொள்ளும் ... அதுவும் தற்காப்புதான். அணு ஆயுதங்கள் இருப்பதால், முழு உலகத்தையும் நான் வென்றுவிடுவேன் என்று நீங்கள் சொல்லமுடியாது. அப்படி செய்ய முடியாது.. உங்களுக்கு தெரிந்த வழியில் நீங்கள் தற்காப்பை செய்கிறீர்கள்.. நாய் அதற்கு தெரிந்த வழியில் தன்னை காத்துகொள்கிறது. ஒரு பகட்டான முறையில் செய்யும் தற்காப்போ அல்லது, அழகாக உண்பதோ,.. இல்லை பகட்டாக உறங்குவதோ , அல்லது அழகான முறையில் இன்பம் கொள்வதோ ஒரு நாட்டை அல்லது ஒரு மனிதனை முன்னேற்றம் அடையச்செய்யாது. அது முன்னேற்றம் அடைந்த நிலை அல்ல ..அனைத்தும் ஒன்று தான். இரண்டாயிரத்தில் ஐந்து பேரோ, அல்லது ஐந்தோ, அல்லது இரண்டாயிரத்தில் ஐநூறு பேரோ, அல்லது இருபதில் ஐந்து பேரோ.. எல்லாம் ஒரே விகிதம் தான். எனவே, மிருக குணங்களை , அழகான வழியில் அல்லது அறிவியல் ரீதியாக செய்வதினால் , மனித சமுதாயம் முன்னேற்றம் அடைந்துவிட்டதென்று கூற முடியாது. அதை அழகிய மிருக குணங்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம் .. அவ்வளவு தான். உண்மையான முன்னேற்றம், கடவுளை உணர்வது மட்டுமே. அது தான் முன்னேற்றம்.